முதற்படி முதலில் படி!
ஆர்.ஓ.இ. = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு.
இது சதவிகிதமாக கூறப்படும். இந்த ஆர்.ஓ.இ. பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு எவ்வளவு என்று பார்ப்போம். பங்குதாரர்களின் முதலீடு என்பது ஷேர் கேப்பிட்டல் மற்றும் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பெல் நிறுவனத்திற்கு 31-03-2010 அன்று ஷேர் கேப்பிட்டல் 489.52 கோடி ரூபாயாகும். அன்றைய தினத்தில் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் 15,427.84 கோடி ரூபாய். ஆக மொத்தம் 15,917.36 கோடி ரூபாய். அவ்வருட நிகர லாபம் 4,310.64 கோடி ரூபாய். ஆகவே பெல் நிறுவனத்தின் ஆர்.ஓ.இ. 27.08% (4,310.64/15,917.36) ஆகும். இதையே ஆர்.ஓ.என்.டபிள்யூ (RONW – Return on Net Worth) என்றும் கூறுவார்கள். இந்த ரேஷியோ, பங்குதாரர்களின் முதலீட்டை ஒரு நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாகப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டும்.
பங்குச் சந்தை முதலீட்டாளர் களால் பரவலாக அலசப்படும் இன்னொரு ரேஷியோ ஆர்.ஓ.ஏ. (ROA – Return on Assets) ஆகும். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஆர்.ஓ.ஏ. = நிகர லாபம்/மொத்த சொத்துக்கள்.
ரேஞ்சில் பொதுவாக இருக்கும். இந்த விகிதத்தையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்தது. இந்த விகிதத் தில் இருந்து அந்த குறிப்பிட்ட தொழிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் (பணம்) தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
'அஸட் டேன்ஓவர் ரேஷியோ’ என்பது ஒவ்வொரு ரூபாய் சொத்துக்கும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதைக் காட்டுவ தாகும். இது நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாக உபயோகித்துள்ளது என்பதைக் காட்டும்.
அஸட் டேன்ஓவர் = மொத்த விற்பனை/ மொத்த சொத்துக்கள்.
'இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ’ (Interest Coverage Ratio) இன்னுமொரு முக்கியமான விகிதமாகும். இந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும்) இது ஒரு முக்கியமான விகிதம். இவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.
இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்/வட்டிச் செலவு.
பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 6,590 கோடி ரூபாயாகும். அவ்வருட வட்டிச் செலவு 33.5 கோடி ரூபாய். ஆகவே, இன்ட்ரஸ்ட் கவரேஜ் கிட்டத்தட்ட 199.6 (6727/33) ஆகும்.
இந்த விகிதம் அதிகமாக இருப்பது பொதுவாக நல்லது. பெல் போன்ற இன்ட்ரஸ்ட் கவரேஜ் உள்ள நிறுவனத்திற்கு வங்கிகளும் தனிநபர்களும் கடன் கொடுப்பதற்கு வரிசையில் நிற்பர். அதோடு மட்டுமல்ல குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் கிடைக்கும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ (Dividend Payout Ratio) என்பது ஒவ்வொரு வருடமும் தான் ஈட்டும் மொத்த லாபத்தில் இருந்து எந்த அளவு பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக நிறுவனம் கொடுக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.
இதுவரை நாம் முக்கியமான ரேஷியோக்கள் பற்றிப் பார்த்தோம். இதுபோல் பல ரேஷியோக்கள் உள்ளன. இது ஒரு ஆரம்பமே; முடிவல்ல! நீங்கள் வாங்கப் போகும் நிறுவனங்களின் விகிதாச்சாரங் களை அலசி ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment