முதற்படி முதலில் படி!
பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
புத்தக மதிப்பு என்றால் என்ன?
நிறுவனத்தின் சொத்து மதிப்பி லிருந்து கடன் மதிப்பைக் கழித்த பிறகு மிஞ்சுவதைத்தான் புத்தக மதிப்பு என்கிறோம்.
இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளினால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும். ஒரு கம்பெனியின் மதிப்பை பலவாறாக கணக்கிடலாம். அவற்றுள் புத்தக மதிப்பும் ஒன்றாகும்.
மற்றுமொரு வகையில் பார்த்தால், ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத் தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்.
சந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்
ஒரு நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கிய இடங்களையும், கட்டடங்களையும் அன்றைய விலையிலேயே இன்றும் காண் பித்துக் கொண்டிருக்கும். ஆகவே, அதன் இன்றைய புத்தக மதிப்பு அதிகமாக இருந்த போதிலும், ஐந்தொகையில் (Balance Sheet) குறைவாகக் காணப்படலாம். அதேபோல் அதன் ஆர்.ஓ.இ. (ROE) என்று சொல்லக் கூடிய பங்கு மூலதனத்திலிருந்து வரும் வருமானம் மிக அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பங்குகள் குறைந்த பி/பிவி-யில் கிடைத்தால் மதிப்பைப் பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு (Value Investorss) அது ஒரு வரப்பிரசாதம்.
இதே கூற்று நேர்மாறாக இருப்பதும் உண்டு. ஒரு கம்பெனியின் பங்கு அதன் புத்தக மதிப்பைவிட குறைவாக சந்தையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1) கம்பெனி அதன் சொத்துக்களின் மதிப்பை அதிகமாக காட்டியிருக்கிறது என்று சந்தை ஊகிப்பது.
2) கம்பெனிக்கு அதன் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் குறைவாக அல்லது நெகடிவ்வாக கூட இருப்பது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.
சந்தை விலை/ புத்தக மதிப்பு விகிதத்தின் அசௌகரியங்கள்.
அதேபோல் பிராண்ட் மதிப்பும் (Brand Value) பல நிறுவனங் களுக்கும் அவர்கள் விற்கும் பொருட்களுக்கும் முக்கிய மானதாக உள்ளது. பிராண்டை மதிப்புள்ளதாக ஆக்குவதற்கு அந்நிறுவனங்கள் பெருவாரியாகச் செலவு செய்கின்றன. இதுபோல் இன்னும் பலப்பல காண முடியாத சொத்துக்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உள்ளன.
அவற்றையெல்லாம் நமது ஐந்தொகை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்தக் காணமுடியாத சொத்துக்களை சந்தை மதிப்பில் எடுத்துக் கொள்வதால் அப்பங்குகளின் விலை புத்தக மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆகவே, இதுபோன்ற நிறுவனங் களுக்கு பி/பிவி-யும் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளைப் தேர்ந்தெடுக்கும்போது துறை வாரியாக பி/பிவி-யை பார்த்து, அத்துறைக்குள் பங்குகளை ஒப்பிடுவது நன்மை பயக்கும்.
மேலும், லாபத்தில் இல்லாத பல நிறுவனங்களின் சந்தை விலை குறைவாக இருக்கும். ஆனால், அவற்றின் முடங்கிக்கிடக்கும் முதலீடு அதிகமாக இருக்கும். ஆகவே, அவற்றின் புத்தக மதிப்பு அதிகமாகக் காணப்படும். பொதுவாக அதுபோன்ற பங்குகளில் இருந்து விலகி இருப்பது நன்று.
இன்னும் கொஞ்சம் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணம்... உங்கள் ஊரில் நீங்கள் ஒரு சூப்பர்மார்க்கெட் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள். அதே ஊரில் இருக்கும் சூர்யா சூப்பர்மார்க்கெட் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்று விலைக்கு வருகிறது. உங்களுக்கோ, அக்கடைக்காரர் சரியாக மார்க்கெட்டிங் செய்யாததால் தான் வியாபாரம் சரியாக நடக்க வில்லை என்று அழுத்தமான நம்பிக்கை. நீங்கள் புதிதாக ஆரம்பித்தால் தளவாடச் சாமான்களுக்கான செலவு சுமார் 5 லட்சம் ஆகும். அதேபோல் தளவாடச் சாமான்கள் உள்ள அந்த கடைக்காரர் கேட்கும் விலையோ ரூ 3 லட்சம்தான். நீங்களும் விலை சாதகமாக உள்ளது என்று அக்கடையை வாங்கிவிடுகிறீர்கள் ரூ. 3 லட்சம் கொடுத்து! சொல்லப்போனால உங்களுக்கு நல்ல டீல் கிடைத்துள்ளது. சூர்யா சூப்பர் மார்க்கெட்டின் புத்தக மதிப்பு 5 லட்சம். அதன் மார்க்கெட் விலையோ 3 லட்சம். ஆக அதன் பி/பிவி 0.6 (3/5 = 0.6) ஆகும். இதைப்போல் பல பங்குகள், தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும் தனது புத்தக மதிப்பிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கின்றன! முதலீட்டாளராகிய உங்களின் வேலை அப்பங்குகளை தேடிக் கண்டுபிடிப்பதுதான்! கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பங்குகள் வேறுபல அளவுகோல்களிலும் ஒத்துவருகிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்!
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment