எப்படி முதலீடு செய்வது?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் நம்பர் வேண்டும். கட்டணம் 100 ரூபாய்க்குள்தான். யூ.டி.ஐ. டெக்னாலஜிஸ் சர்வீசஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தால் சுமார் 15 நாட்களுக்குள் பான் கார்டு வந்துவிடும்.
கே.ஒய்.சி.!
பான் கார்டு நகலுடன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன கிளை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டை அணுகினால், முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். முதலீட்டுத் தொகையை காசோலை அல்லது டி.டி-ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
100 ரூபாய்கூட போதும்!
சாதாரண மக்களும் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக ஆரம்ப முதலீட்டுத் தொகையாக 100 ரூபாயை பல நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.யூனிட் ஒதுக்கீடு
ஃபண்ட் நிறுவனம், ஒரு திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்துவதை என்.எஃப்.ஓ. என்கிறார்கள். நியூ ஃபண்ட் ஆஃபர் என்பது இதன் விரிவாக்கம். பொதுவாக, என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்ய குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயாக இருக்கும். 2009 ஜூலை மாதத்துக்கு முன்னர் ஃபண்டில் முதலீடு செய்ய நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது சுமார் 2% ஆக இருந்தது. அதாவது, 5,000 ரூபாய் முதலீடு செய்தால் 100 ரூபாயைக் கழித்துக் கொண்டு மீதமுள்ள 4,900 ரூபாய்க்கு யூனிட் ஒதுக்கி வந்தார்கள்.நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப் பட்ட பிறகு, இப்போது முழுத் தொகைக்கும் யூனிட்கள் ஒதுக்கப் படுகிறது. இங்கே யூனிட் என்பது 10 ரூபாய் முகமதிப்பு கொண்டது. இந்த மதிப்புக்குத்தான் டிவிடெண்ட் வழங்குவார்கள்.
என்.ஏ.வி.!
என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்யாமல் ஏற்கெனவே செயல்பட்டு கொண்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில்கூட முதலீடு செய்யலாம். அப்படி செய்யும்போது, முதலீடு செய்யும் தொகையில் அப்போதைய என்.ஏ.வி-யில் வகுத்து யூனிட்களாக உங்களது கணக்கில் செலுத்தப்படும்.
முதலீட்டுக்கான ஆதாரம்!
உங்களின் பெயரில் யூனிட்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமாக அக்கவுன்ட் ஸ்டேட்மென்டை தபால் அல்லது மெயில் மூலம் அனுப்பி வைப்பார்கள்.Source - Vikatan Magazine
No comments:
Post a Comment