முதற்படி முதலில் படி!
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
எஃப் அண்ட் ஓ. முதல் என்.சி.டி. வரை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பல்வேறு விஷயங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை கட்டுப்பாடுகளைக் (ரெகுலேஷன்) குறித்துப் பார்ப்போம்.
வெப்சைட் மூலமாகப் பார்த்துக் கொள்ள வசதி என பல விஷயங்கள் வந்துவிட்டன.
இவ்வளவு வெளிப்படைத் தன்மை இருந்தும், பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இன்றும் பல முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பங்கு களை வாங்கும் போதும், விற்கும்போதும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை முதலில் சொல்லிவிடுகிறேன்.
1. உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் டிரேடிங் செய்த போதெல்லாம் உங்களுக்கு தகவல் வரும். மேலும், உங்கள் டீமேட் கணக்கில் இருந்து பங்குகள் உங்களுக்குத் தெரியாமலே விற்கப்பட்டாலும் உங்களுக்குத் தகவல் வந்துவிடும்.
2. இ-மெயில் மற்றும் இன்டர்நெட் வசதி இன்று பங்கு முதலீட்டிற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆகவே, இ-மெயில் அக்கவுன்ட் இல்லையெனில், ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வர்த்தகம் செய்யும் போதெல்லாம், உங்களுக்கு கன்பஃர்மேஷன் மெயில் மற்றும் கான்ட்ராக்ட் வந்துவிடும்.
4. பவர் ஆஃப் அட்டார்னி புரோக்கரிடம் கொடுக்காமல், நீங்கள் ஒவ்வொரு தடவையும் செக் (காசோலை) போல டீமேட் ஸ்லிப் எழுதிக் கொடுக்கலாம். நீங்கள் ஆக்டிவ் வான முதலீட்டாளர் இல்லை எனில், இம்முறை உங்களுக்கு சரிப்பட்டு வராது.
5. டிரேடிங் அக்கவுன்டை ஒரு இடத்திலும், டீமேட் அக்கவுன்டை வேறொரு இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதிலும் அசௌகரியங்கள் அதிகம்.
6. நீங்கள் பங்குச் சந்தை பற்றி முற்றிலும் அறிந்தவர் எனில், எங்கு வேண்டுமானாலும் உங்கள் அக்கவுன்டை இன்டர்நெட் மூலம் திறந்து அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள். பங்குச் சந்தை பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர் எனில், ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை திறந்து கொள்வது நல்லது.
8. எவரேனும் உங்களை அணுகி நீங்கள் லட்ச ரூபாய் முதலீடு செய்யுங்கள். நான் மாதத்திற்கு 5% அல்லது 10% பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்துத் தருகிறேன் என்று கூறினால், நம்பாதீர்கள்! அப்படி நம்பினீர்கள் எனில் நீங்கள் ஏமாறுவது உறுதி!
9. எக்காரணம் கொண்டும் புரோக்கிங் நிறுவனத்தில் வேலை செய்யும் டீலர்களிடம் உங்களது அக்கவுன்டை அவரே ஆப்ரேட் செய்து, சம்பாதித்துத் தருமாறு கூறாதீர்கள்.
10. குறைந்தது ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், நீங்கள் முதலீடு செய்த பணம் எவ்வளவு, விற்றது எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்ற கணக்கைப் பாருங்கள்.
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் பின்பற்றிய பின்பும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால், என்ன செய்யலாம் என்பது பற்றி கீழே பார்ப்போம்.
தவிர, தேசிய பங்குச் சந்தை சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் முதலீட்டாளர் சேவை மையங்களை அமைத்துள்ளது. அம்மையங்களை தொடர்பு கொண்டு உங்களது பிரச்னை களுக்குத் தீர்வு காணலாம். அதுபோல, மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) அதன் புரோக்கர்கள் மீது புகார் செய்வதற்கு வசதி செய்து தந்திருக்கிறது. விவரங்கள் அதன் இணையதளத்தில் உள்ளது.
பங்குச் சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள பங்கு நிறுவனங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தாலும், பங்குச் சந்தை புகார் மையத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். பொதுவாக பெரிய, தரமான நிறுவனப் பங்குகளை வாங்கும்போது இது மாதிரியானப் பிரச்னைக்கு இடம் இல்லை.
நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் புரோக்கரிடம் அல்லது பங்குச் சந்தையிடம் புகார் செய்யும்போது, செபிக்கும் ஒரு நகல் அனுப்புவது நல்லது. செபி-யின் இணையதளத்தில் புரோக்கர் குறித்த புகார்களை ஏற்றுக் கொண்டு சரி செய்ய ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனி செல்கள் நியமிக்கப் பட்டுள்ளன. நமது தென் பிராந்தியத்திற்கான செபி அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ளது.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment