முதற்படி முதலில் படி!
சென்ற சில வாரங்களில் குவாலிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் பார்க்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து கண்டோம். இனி வரும் வாரங்களில் குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
இன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும். கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்டில் நிறுவனத்திற்கு பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும்.
முதலில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி இந்த வாரம் பார்ப்போம்...
இ.பி.எஸ். அதாவது, ஒரு பங்கிற்கான வருமானம்... இதைப் பற்றி எளிமையான உதாரணம் ஒன்றின் மூலம் புரிந்துகொள்வோம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010 முடியும் நிதி ஆண்டின் இன்கம் ஸ்டேட்மென்டின் ஒரு பகுதியை இங்கே கொடுத்துள்ளோம். அந்த வருடம் அந்த வங்கியின் நிகர லாபம் 4,024.98 கோடி ரூபாய். அதாவது 4,025 கோடி ரூபாய். அந்த வங்கியின் பங்கு மூலதனம் 1,114.89 கோடி ரூபாய். ஒவ்வொரு பங்கும் 10 ரூபாய் முகமதிப்பு கொண்டது. ஆகவே அந்நிறுவனத்தின் அன்றைய தினத்தில் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 111.489 கோடியாகும். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுக்கும்போது (4024.98/111.489) கிடைப்பதுதான் இ.பி.எஸ். இதைத்தான் 'பேஸிக் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். அதற்குக் கீழ் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று ஒன்று இருப்பதைக் கவனியுங்கள். அது என்ன?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற பல தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களுக்கு (பெரும்பாலும் டாப் லெவல் ஊழியர்களுக்கு) நன்றாக லாபத்தை ஈட்டித் தந்தால் அந்த நிறுவனத்தின் பங்குகளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ எதிர்காலத்தில் தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பார்கள். அந்த வாக்குறுதிப் பங்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை சிறிது அதிகமாகும். அப்போது அந்நிறுவனத்தின் இ.பி.எஸ். சற்று குறையும். அதைத்தான் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் டைல்யூட்டட் இ.பி.எஸ். 35.99 ஆகும். கன்சர்வேட்டிவ் கணக்கிற்கு டைல்யூட்டட் இ.பி.எஸ்ஸை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
சில சமயங்களில் சில நிறுவனங்கள் தற்போது முடிந்த காலாண்டில் பெரிய நஷ்டத்துடன் செயல் பட்டிருக்கும். அதனால் அதன் இ.பி.எஸ் நெகட்டிவ்வாக இருக்கும். அப்போது கடந்த நிதி ஆண்டு அல்லது டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை வைத்துப் பார்த்தால், இன்னும் பாஸிட்டிவ் ஆகவே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பங்குகளை வாங்கச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பொதுவாக கடந்த 5-10 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி பாஸிட்டிவ் இ.பி.எஸ்-ல் இருந்துவரும் நிறுவனங்களாகப் பார்த்து வாங்குவது நல்லது.
பி/இ என்பது பொதுவாக எதைக் குறிக்கிறது?
நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ்.
பி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா?
பொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல! மிகச் சிறிய நிறுவனங் களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும். ஏனென்றால் அந்நிறுவனங்களில் ரிஸ்க் அதிகம் என்பதே-பொருளாதார இறக்கத்தில் அந்நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் அல்லது ஒரு பெரிய கஸ்டமர் விலகிப் போனால், அந்நிறுவனம் நஷ்டத்தில் சென்றுவிடலாம் அல்லது அந்நிறுவனத்தில் உள்ள முக்கிய நபருக்கு ஏதேனும் ஆகி விட்டால் அந்நிறுவனமே ஆடிப் போகலாம் - இதுபோல பல ரிஸ்க் உள்ளது. ஆகவே, சிறிய நிறுவனங் களின் பி/இ குறைவாக இருக்கும். அதே சமயத்தில் பெரிய நிறுவனங் களின் பி/இ அதிகமாக இருக்கும்.
அதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும் பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாய மானதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும். இல்லையெனில் ஒரு நிறுவனம் வளர்ச்சியுடன் கூடிய லாபத்தை தந்து கொண்டே இருக்கும். மற்றொன்றில் வளர்ச்சி இருக்கும்; ஆனால் லாபம் வளராது. இதுபோல் பலப்பல காரணங்கள் பி/இ-ன் அளவை நிர்ணயிக்கின்றன.
சரி, பங்கு வாங்க புறப்பட்டு விட்டீர்கள். நீங்கள் வாங்க நினைக்கும் நிறுவனப் பங்கின் பி/இ-ஐ அந்நிறுவனத்தைச் சார்ந்த துறையின் சராசரி பி/இ விகிதத் தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்; மேலும் அந்நிறுவனத்தின் நேருக்கு நேரான போட்டி நிறுவனத்தின் பி/இ-யோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். மேலும் பி/இ மட்டுமே ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றோடும் சேர்த்துப் பார்க்கும் போது நீங்கள் பங்கை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.
கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் கள் குறைந்த பி/இ உள்ள, நீண்ட காலம் தொழில் செய்து வரக்கூடிய தரமான நிறுவனங்களை நாடிச் செல்வது சிறந்தது.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment