ஏன்? ஏதற்கு?
அதிக விலையுள்ள ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டுமென்று பணம் சேர்த்து வருவோம். மொத்தமாகப் பணம் சேர்ந்தபிறகு எடுத்துக் கொண்டு போனால், விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்து, அந்தப் பொருளின் விலையும் எகிறியிருக்கும். கடைசியில் பொருளை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவோம்.
இன்றைய தேதியில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் தருவதில் பங்குச் சந்தை முதலீடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அதில் முதலீடு செய்ய, மார்க்கெட் பற்றிய விரிவான நல்ல அறிவு, போதுமான நேரம், காலம் எல்லாம் வேண்டும். இதெல்லாம் நம்மில் பலருக்கு வாய்ப்பதில்லை.
இந்த நிலையில் பங்குச் சந்தைக்கு இணையாக, ஏன் அதைவிட அதிக வருமானம் கிடைக்கும் முதலீடு எது என்று பார்த்தால் அது மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகதான் இருக்கும்.
பல லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டி, அதை சிறப்பான திட்டங்கள் பலவற்றில் பிரித்து முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட். அதாவது, பரஸ்பரம் லாபம் அடைவது இதன் முக்கிய நோக்கம்.
கடந்த ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டால், ஒரே ஒரு ஆண்டைத் தவிர, மற்ற எல்லா ஆண்டிலும் மியூச்சுவல் ஃபண்டில் முக்கிய திட்டமான ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் கொடுத்திருக்கிற சராசரி வருமானம், பங்குச் சந்தை வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது.
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment