பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
சென்ற வாரம் டிஸ்கவுன்ட் ரேட்டில் பயன்படுத்தப்படும் சில முக்கிய வார்த்தைகளுக்கான அர்த்தத்தைப் பார்த்தோம். இவ்வாரம் 'காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி’யைக் கண்டுபிடித்து டிஸ்கவுன்ட் ரேட்டை கண்டுபிடிப்போம்.
ஆக, ஃபார்முலாவை நாம் இவ்வாறு சுருக்கலாம்: (RE) = RF + β X (RP)
மேற்கண்ட ஃபார்முலாவில் RFஎன்பது 8.30% என்று எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் நாம் ஏற்கெனவே கண்டதுபோல நமது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரங்கள் அந்த அளவு யீல்டை தற்பொழுது தந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, அதுதான் ரிஸ்க் ஃப்ரீ ரேட்.
இங்கு நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையைச் சார்ந்தது ஆகும். அத்துறையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்கள் புளூடார்ட் எக்ஸ்பிரஸ் லிமிடெட் (Blue Dart Express Ltd.), கேட்டி (Gati), ஆல்கார்கோ (Allcargo) போன்ற சில நிறுவனங்கள் ஆகும். நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் செய்யும் தொழிலுடன் நெருங்கி வருவது புளூடார்ட் ஆகும். கிரிஸில் என்ற ரேட்டிங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரிப்போர்ட்டில் புளூடார்ட்டின் பீட்டா 0.7 என கணக்கிட்டுள்ளது. இத்துறையில் இந்தியாவில் இது ஒரு ஜாம்பவான் நிறுவனம் ஆகும். மேலும், இது ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனி ஆகும். நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் ஒரு சிறிய நிறுவனமாகும். இதன் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இதனுடைய பீட்டாவை 1.3 என்று எடுத்துக் கொள்வோம். இது நிறுவன சைஸ், துறை, நாடு, புரமோட்டர் போன்ற பலவற்றைக் கொண்டு வேறுபடும்.
இப்போது நமது தமிழ்நாடு கூரியர் கம்பெனிக்கு காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி ரெடி:
(RE) = 8.30 + (1.3 X 8.30) = 19.09%
அடுத்து நாம் டிஸ்கவுன்ட் ரேட்டை 'வேக்’ (WACC – Weighted Average Cost of Capital) முறையைக் கொண்டு கண்டுபிடிப்போம். வேக் முறையில் டிஸ்கவுன்ட் ரேட்டை கணக்கிடுவதற்கு நிறுவனத்தின் பங்கு மற்றும் கடன் சதவிகிதம் நமக்குத் தெரிய வேண்டும். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் ஒரு நிறுவனம் தொழில் செய்வதற்கு பணம் இரண்டு வகையில் கிடைக்கிறது - ஒன்று, பங்கு மூலதனம் (E - Equity) வாயிலாக; மற்றொன்று கடன் (D - Debt) வாங்குவதன் மூலமாக. நமது தமிழ்நாடு கூரியர் கம்பெனி வாங்கியிருக்கும் நீண்ட கால கடன்
பங்கு சதவிகிதம் = E/ (D + E) X 100 = (5.30)/(5.30 + 3.53) X 100 = 60%
கடன் சதவிகிதம் = D/ (D + E) X 100 = (3.53)/(5.30 + 3.53) X 100 = 40%
தமிழ்நாடு கூரியர் நிறுவனம் தான் வாங்கியுள்ள கடன்களுக்கு ஆண்டுக்கு 15% வீதம் வட்டி கொடுத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். (இன்றைய நிலையில் வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் ஆண்டுக்கு 10% - 12% வட்டி கொடுத்து வருவதால், நமது கூரியர் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 15%-க்கு குறைவாக கிடைக்கவில்லை. வட்டி குறையும் காலங்களில் இந்த வட்டியும் குறைய வாய்ப்பிருக்கிறது.)
வேக் = (காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி ஜ் பங்கு சதவிகிதம்) + {(கடனிற்கு கொடுக்கும் வட்டி விகிதம் ஜ் கடன் சதவிகிதம்) ஜ் (1 - டேக்ஸ் ரேட்)}
WACC = (Cost of Equity x Percent of Equity) + {(Interest Rate x Percent of Debt) x (1 – Corporate Tax Rate)}
இதுவரை நாம் மேலே கண்டுபிடித்த அனைத்தையும் உபயோகித்து கணக்கு செய்தால், கீழ்க்கண்டவாறு வேக்கை (டிஸ்கவுன்ட் ரேட்டை) கண்டுபிடித்து விடலாம்.
வேக் = (19.09 X 60%) + {(15% X 40%) X (1 - 33.99%)} = 15.41%
இதற்கு அடுத்த ஸ்டெப், இந்த டிஸ்கவுன்ட் ரேட்டை உபயோகித்து நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனத்திற்கு டெர்மினல் வேல்யூ கண்டுபிடிப்பது. அதற்கு முன்பு டெர்மினல் வேல்யூ பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஃபோர்காஸ்ட் செய்துள்ளோம். ஐந்து வருடங்களுக்குப் பிறகும் தமிழ்நாடு கூரியர் கம்பெனி நடந்து கொண்டுதான் இருக்கும். ஆக, அதன்பின் வருகிற காலங்களில் உள்ள அந்நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கில் கொண்டு வருவது? அதற்குத்தான் இந்த டெர்மினல் வேல்யூ. நிறுவனங்களுக்கு அழிவு இல்லை. ஆகவே, தமிழ்நாடு கூரியர் கம்பெனி எதிர்காலத்தில் எப்போதும் ஆபரேஷனில் இருக்கும், மேலும் எப்போதும் வருமானத்தைத் தந்து கொண்டிருக்கும் என எடுத்துக் கொள்வோம். அடுத்த இதழில் டெர்மினல் வேல்யூவைக் கண்டுபிடித்து, டிஸ்கவுன்டட் கேஷ் ஃப்ளோ கண்டுபிடிப்போம்.
(படி ஏறுவோம்)
No comments:
Post a Comment