Pages

Thursday, June 16, 2011

டெபிட் கார்டு! - ஏமாறாமல் இருக்க எளிய வழிகள்!


டெபிட் கார்டு! - ஏமாறாமல் இருக்க எளிய வழிகள்!

அவசர பணத் தேவைகளுக்கு வங்கிகளில் கால்கடுக்க நின்ற நிலையை மாற்றியது ஏ.டி.எம்.இயந்திரமும், டெபிட் கார்டும்.
குறுகிய காலத்தில் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டன இந்த இரண்டும்.
ஆனாலும் டெபிட் கார்டின் பயன்பாடு குறித்தும், பணப் பரிவர்த்தனையின்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு வங்கிகள் வழங்கும் நடைமுறைத் தீர்வுகள் குறித்தும் வங்கி வட்டாரத்தில் உள்ள சில அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த டிப்ஸ்கள் இதோ...!
எங்கே வாங்குவது?
சேவிங் பேங்க் அக்கவுன்ட் வைத்திருக்கும் எல்லோருக்கும்  எல்லா வங்கிகளும் டெபிட் கார்டை கொடுக்கின்றன. முன்பெல்லாம்  டெபிட் கார்டு பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது கணக்கு தொடங்கும்போதே டெபிட் கார்டையும் அதற்கான 'ரகசிய எண்’ணையும் கொடுத்து அசத்துகின்றன பல வங்கிகள்.
பணம் வராமல் போனால்..?
சில நேரங்களில் ஏ.டி.எம்-ல் பணம் வெளிவராது.  ஆனால்,  நம் கணக்கில் பணம் எடுக்கப் பட்டதாக ரசீது வந்துவிடும். இப்படி நடந்தால் பதறத் தேவையில்லை. உடனே உங்களது வங்கியின் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த தேதி, நேரம், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடையது என்கிற தகவல்களை சொன்னால் போதும்; வங்கி அதை சரி பார்த்து, தவறு நடந்திருந்தால்  நமக்கான பணத்தை கொடுத்துவிடும். இந்தப் பணம் ஏழு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பது ஆர்.பி.ஐ.யின் லேட்டஸ்ட் உத்தரவு.
கார்டு மாட்டினால்...?
ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கார்டுக்குரிய ரகசிய எண்ணை குறித்து ஏதாவது குழப்பம் இருந்தால் உடனே 'கேன்ஸல்’ பட்டனை அழுத்தி, கார்டை வெளியே எடுத்துவிடுவதே நல்லது. அதிலும் வெளியூருக்கு போன சமயத்தில் ஏதோ ஒரு ரகசிய எண்ணை போடும் தவறை செய்யக்கூடாது. காரணம், வெளியூர் ஏ.டி.எம்.மில் நம் கார்டு மாட்டினால் திரும்ப பெற அலைய வேண்டியிருக்கும். வெளியூர் செல்லும் சமயங்களில் முடிந்த வரை ஸ்வைப் வசதி (கார்டை உள்ளே சொருகிவிட்டு உடனே எடுத்துவிடும் வசதி)  கொண்ட ஏ.டி.எம். மெஷினை  பயன்படுத்தலாம்.
ஒருவேளை, ஏ.டி.எம்.-ல் கார்டு மாட்டினால், உடனே சேவை மையத்துக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்து, நம் கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி  'பிளாக்’ செய்வது அவசியம்.
இதன்பிறகு புகார் கொடுத்து, அந்த கார்டுக்கு சொந்தக்காரர் நாம்தான் என்கிற ஆதாரத்தை கொடுத்தால் அடுத்த சில நாட்களில் கார்டு திரும்ப கிடைத்துவிடும். தொலைந்த கார்டுகளை சரிபார்த்துக் கொடுக்க வங்கிகள் 100-200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.
ஆன்லைனில்...!
ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும்போது, தனது பிறந்த தேதி, பான் கார்டு நகல், இ-மெயில் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்திருந்தால், அந்த வங்கியின் இணையத்திற்கு சென்று, இ-பேங்கிங் அக்கவுன்டை  தொடங்கிக் கொள்ளலாம்.
பொதுவாக ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் கேட்கப்படும். அதை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் சரியாக நடைபெறும். அதில் சில பிழைகள் இருந்தால், பணப் பரிமாற்றம் தடைபடுவதோடு,  பணமும் நம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும்.
இனி எந்த ஏ.டி.எம்.மிலும் டென்ஷனாகாமல் ஜாக்கிரதை யாக உங்கள் டெபிட் கார்டை பயன் படுத்துவீர்கள்தானே!
- செ.கார்த்திகேயன்
Source - Vikatan Magazine

Tuesday, June 14, 2011

முதற்படி முதலில் படி! - 28

முதற்படி முதலில் படி!


சென்ற வாரம் நாம் பார்த்த 'டிஸ்கவுன்ட் கேஷ் ஃப்ளோ’ முறை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். இம்முறையில், வரும் ஆண்டுகளில் நிறுவனத்திற்கு வரப்போகும் வருமானத்தை முடிந்தவரை துல்லியமாகக் கணிப்பது; அவ்வாறு கணித்த வருமானத்தை வைத்து அந்நிறுவனத்திற்கு கையில் கிடைக்கும் கேஷ் எவ்வளவு என்று கணக்கிடுவது; சரியான டிஸ்கவுன்ட் ரேட் உபயோகித்து என்.பி.வி., அதாவது 'நெட் பிரஸன்ட் வேல்யூ’ கண்டுபிடிப்பது என மூன்று விஷயங்கள் தேவை.
திர்கால வருமானத்தை எவ்வாறு கணிப்பது? பலருக்கும் இது ஒரு கடினமான காரியம். சமீபத்தில் தொடங்கப் பட்ட நிறுவனமாக இருந்தால், அதன் தொழில் எவ்வாறு நடக்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஆனால், நிறுவனம் பல ஆண்டு களாக நடந்துவரும் பட்சத்தில், எதிர்காலத்தைக் கணிப்பது சுலபமே.
ஒரு எளிமையான உதாரணத் திலிருந்து தொடங்கலாம். நீங்கள் ஒரு கூரியர் கம்பெனியை நடத்து கிறீர்கள். அதற்கு தமிழ்நாடு கூரியர் கம்பெனி என பெயர் வைத்துக் கொள்வோம். இந்தியா முழுக்க உங்களுக்கு கிளை உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். உங்கள் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு களின் இன்கம் ஸ்டேட்மென்ட் கீழே (அட்டவணை 1) கொடுக்கப் பட்டுள்ளது.

அதிலிருந்து உங்களால் என்ன புரிந்துகொள்ள முடிகிறது? விற்பனை (டேர்னோவர்) சீராக வளர்ந்து வருகிறது - சராசரியாக இதுவரை ஆண்டுக்கு 16% [(15% + 15% + 17% + 18%) /4] வளர்ந்துள்ளது. ஆபரேட்டிங் செலவுகள் (சராசரியாக) விற்பனையில் 80.4% ஆக உள்ளது. விற்பனையோடு ஒப்பிடும்போது வட்டிச் செலவு சராசரியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.5% உள்ளது. நிகர லாப மார்ஜின் கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 9.2%-மாக உள்ளது. இந்த சராசரி சதவிகிதங்களை வைத்து உங்களால் உங்கள் நிறுவனத்தின் நிதிநிலைமை இனிவரும் ஆண்டுகளில் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியுமல்லவா?
கன்ஸர்வேட்டிவாகப் பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்சம் கடைசி ஐந்தாண்டுகளில் கண்ட வளர்ச்சியாவது இருக்க வேண்டும்.மற்றுமொரு கோணத்தில் பார்த்தால், இப்போதிருக்கும் வளர்ச்சியைவிட நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தோன்றுகிறது. பெஸ்ட் கேஸ் ஸீனரியோவிற்கு போகும் முன், கன்ஸர்வேட்டிவ் ஸீனரியோவைப் பார்த்துவிடுவோம். ஏனென்றால் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய கன்ஸர்வேட்டிவ் மதிப்பு என்ன என்பதை நீங்கள் அறிய ஆவலாக உள்ளீர்கள் அல்லவா, அதனால்தான்!
அட்டவணை 1-ல் நாம் கணக்கிட்டுள்ள சதவிகிதம் அனைத்தும் விற்பனையை (டேர்னோவர்) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு விற்பனை சராசரியாக 16% வளர்ந்துள்ளது. ஆகவே, இனிவரும் ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் அந்த அளவாவது வளரும். அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 16% விற்பனையை உயர்த்திக் கணக்கிட்டு உள்ளோம் (காண்க அட்டவணை 2).
அதேபோல் இதுவரை ஆபரேட் டிங் செலவுகள் சராசரியாக விற்பனையுடன் ஒப்பிடும்போது 80.4% இருந்துள்ளது. ஆகவே, அதே சதவிகித செலவை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வோம். அந்தந்த ஆண்டு விற்பனையை 80.4%-ஆல் பெருக்கினால் அந்தந்த ஆண்டுக் குரிய ஆபரேட்டிங் செலவு கிடைத்துவிடும். அதேபோல் வட்டிச் செலவு மற்றும் தேய்மானச் செலவின் கடந்த ஐந்து ஆண்டுகால சராசரி (முறையே 2.5% அண்ட் 3.2%) என்ன வென்று நமக்குத் தெரியும்.
அந்த சராசரியைக் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டில் வட்டி மற்றும் தேய்மானச் செலவு எவ்வளவு இருக்கும் என்பதை அட்டவணை 2-ல் கணக்கு செய்துள்ளோம் (குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்தந்த ஆண்டு விற்பனையுடன் பெருக்குவதன் மூலம்).
ஆக, இப்போது அடுத்த ஐந்து ஆண்டிற்கான இன்கம் ஸ்டேட் மென்ட் கணிப்பு (ஃபோர்காஸ்ட்) தயார். இனி அடுத்த கட்டமாக 'ஃப்ஃரீ கேஷ் ஃப்ளோ’வைக் (free cash flow) கணக்கிட வேண்டும். சரி, முதலில் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ என்றால் என்னவென்று பார்த்து விடுவோம். நாம் நிறுவனத்திற்கு நிகர லாபம் என்று கூறுவது புத்தக லாபம்தானே தவிர, நிறுவனத்திற்கு கையில் கிடைக்கும் பணம் அல்ல! மேலும், தேய்மானச் செலவு போன்றவை புத்தகச் செலவுதானே, தவிர நிஜமான செலவு அல்ல!
அதேபோல், முதலீட்டிற்காக செலவு செய்யப்படும் கேஷ் நமது இன்கம் ஸ்டேட்மென்டில் வருவதில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு வருவதுதான் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’. 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சூத்திரம் உதவியாக இருக்கும்.
ஃப்ரீ கேஷ் ஃப்ளோ = ஆபரேட்டிங் பிராஃபிட் - வருமான வரி - முதலீட்டுச் செலவு (கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ்) - ஓர்க்கிங் கேப்பிட்டல்
உங்களது தமிழ்நாடு கூரியர் கம்பெனி லிமிடெட்டிற்கு இனி வரும் வாரங்களில் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ கணக்கிட்டு, டிஸ்கவுன்ட் ரேட் கண்டுபிடித்து, என்.பி.வி-யைக் கணக்கிடு வோம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Tuesday, June 7, 2011

முதற்படி முதலில் படி! - 27

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
'டிஸ்கவுன்ட் கேஷ் ஃப்ளோ!'
சென்ற சில வாரங்களாக நிறுவனங்களையும் அதன் பங்குகளையும் மதிப்பிடுவது குறித்து கண்டு வருகிறோம். இவ்வாரம் உலக அளவில் இன்று மிகவும் பரவலாக நிறுவனங்களையும் அதன் பங்குகளையும் மதிப்பிட உதவும் முறையான டி.சி.எஃப் (DCF – Discounted Cash Flow) முறையைப் பற்றி விரிவாகக் காண்போம். இம்முறையை என்.பி.வி (NPV – Net Present Value) முறை என்றும் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ (FCF – Free Cash Flow) முறை என்றும் கூறுவர்.
ம்முறையைத்தான் பெரிய முதலீட்டாளர் களும், நிறுவன முதலீட்டாளர்களும், இன்வெஸ்ட் மென்ட் பேங்கர்ஸும், நிறுவனங் களும், இன்னும் பலரும் (நமது மும்பை வாலாஸ் உட்பட) பயன் படுத்துகிறார்கள். அவ்வளவு ஏன் நீங்கள் பார்க்கும் புரோக்கரேஜ் ரிப்போர்ட்களிலும் இந்த முறை தான் பயன்படுத்தப்படு கிறது. இது நாம் கூறிய மதிப்பீட்டு முறை களிலேயே மிகவும் முக்கிய மானது என்பதால், இதைப்பற்றி சற்று விரிவாகவே காண்போம்.
இந்த முறையைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ளும் முன் ஒரு சிறிய உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்க ளுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கிறது. நிறுவனம் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் போனஸாக தருவது என்று முடிவு செய்துவிட்டது. அந்த போனஸை நீங்கள் இன்றே வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஐந்து வருடம் கழித்தும் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் புத்திசாலி என்றால் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்வீர்கள்? இன்றே வாங்கிக் கொள்ளும் ஆப்ஷனைத்தான்! ஏனென்றால், அப்பணத்தை வாங்கி நீங்கள் உடனே வங்கி டெபாசிட்டில் போட்டால்கூட இன்னும் ஒரு வருடத்தில் அந்த பணம் 1.10 லட்ச ரூபாயாகிவிடுமே! இதைத்தான் ஆங்கிலத்தில் 'டைம் வேல்யூ ஆஃப் மணி’ (Time Value of Money) என்று கூறுவார்கள். 

இன்னும் ஒரு வருடத்தில் அல்லது இரண்டு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு என்ன என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன கூறுவீர்கள்? நாம் அனைவரும் வட்டி கொடுத்து பழகிவிட்டோம். அதனால் நமக்கு இன்றைய லட்ச ரூபாய், ஒரு வருடம் கழித்து லட்சத்துப் பத்தாயிரம் ஆகிவிடும் (10% வட்டியில்) என்பது நன்றாகத் தெரியும். ஆனால், இதையே ரிவர்ஸாக யோசித்துப் பார்த்தால்...? அதாவது, எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாய்க்கு இன்றைக்கு நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம்? கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் விடை கண்டு பிடிக்க முடியுமே தவிர, இந்த ரிவெர்ஸ் மூளைதான் இந்த மதிப்பீட்டு முறைக்குத் தேவை.
இன்னும் ஒரு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு 90,909 ரூபாய். அதேபோல் இன்னும் இரண்டு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு 82,645 ரூபாய். முன்பக்கம் அட்டவணை ஒன்றை கொடுத் துள்ளேன். அதில் இனிவரும் 1, 2, 3... ஆண்டு களில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு, வெவ்வேறு டிஸ்கவுன்ட் ரேட்டில் தந்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு அட்டவணையின் கடைசி வரியை எடுத்துக் கொள்ளவும். இன்னும் 20 வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்சத்தின் இன்றைய மதிப்பு 14,864 (10% டிஸ்கவுன்ட் ரேட்டில்) ரூபாய்தான். அதுவே 15% டிஸ்கவுன்ட் எனில் 6,110 ரூபாய், 20% டிஸ்கவுன்ட் எனில் 2,608 ரூபாய் ஆகும். ஆக, நீங்கள் எடுத்துக் கொள்ளும் டிஸ்கவுன்ட் ரேட்டைப் பொறுத்து உங்களின் இன்றைய மதிப்பு மாறுகிறது அல்லவா? இதுதான் இந்த டி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு! மேலே கண்ட அட்டவணையில் இருந்து ஒன்று தெள்ளத் தெளிவாக உங்களுக்குப் புரிந்தி ருக்கும். எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பணத்திற்கு, இன்று கிடைக்கும் பணத்தைவிட மதிப்பு குறைவு என்று!
எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பணத்தை, இன்றைய மதிப்புடன் ஒப்பிடு வதற்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை வைத்து டிஸ்கவுன்ட் செய்வதால்தான், இந்த முறையை 'டிஸ்கவுன்டட் கேஷ் ஃப்ளோ மெத்தட்’ என்று கூறுகிறோம். சரி, இந்த டி.சி.எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு வர இருக்கும் கேஷ் ஃப்ளோ அனைத்தையும் கணக்கிட்டு, அதை இன்றைய தேதிக்கு டிஸ்கவுன்ட் செய்து, அதன் மூலம் மதிப்பைக் காண்பதுதான் டி.சி.எஃப் முறை. சரி, எதிர்காலத்தில் வரப்போகும் கேஷ் ஃப்ளோவை எப்படி கணக்கிடுவது?
இதில்தான் மதிப்பீடு செய்பவர்களின் கைங்கரியம் உள்ளது. இதைக் கணக்கு செய்வதற்கு எதிர்காலத்தில் எவ்வளவு விற்பனை ஆகும், எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு நிகர லாபம் கிடைக்கும், எவ்வளவு கேஷ் ஃப்ளோ கிடைக்கும் என்று புரஜெக்ஷன் (projection) செய்ய வேண்டும். எவ்வாறு இந்த முறை வேலை செய்கிறது என்பதை விரிவாக அடுத்த வாரம் தெரிந்து கொள்ளும் முன்பு, இம்முறையில் உள்ள சாதக பாதகங்கள் என்னவென்று பார்த்து விடுவோம். என்னிடம் பலர் ஒரு நிறுவனப் பங்கின் உண்மையான மதிப்பை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்டுள்ளார்கள். பி/இ, பி/பிவி, சந்தை மதிப்பு போன்ற முறைகள் யாவும் ஒப்பீட்டு முறைகள் தானே தவிர, ஒரு பங்கின்/நிறுவனத்தின் உண்மையான மதிப்பைக் காண்பிப்பவை அல்ல. ஆனால், இந்த டி.சி.எஃப் முறையானது உண்மையான மதிப்பைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான மதிப்பைத் தெரிந்து முதலீடு செய்வதால், பங்குகளின் மதிப்பு குறையும்போது பயப்படாமல் இருக்கலாம். மேலும், முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய கேஷ்ஃப்ளோவை மட்டுமே இந்த முறையில் எடுத்துக் கொள்வதால், மதிப்பு சரியாக கிடைக்கும். சீரான அல்லது குறைந்த வளர்ச்சியில் இருக்கும் தொழில்களுக்கு இந்த முறை கணகச்சிதமாகப் பொருந்தும்; ஏனென்றால் துல்லியமான மதிப்பைத் தரும்.
இந்த முறையில் உள்ள பாதகங்கள் என்னென்ன? எதிர்கால விற்பனை, செலவுகள் போன்றவை மதிப்பிடுபவரால் தெரிந்த அளவு கணிக்கப்படுகிறது. இந்த கணிப்பு எப்போதும் துல்லியமாக இருக்கும் என்று கூற முடியாது. அதை வைத்து மதிப்பும் மாறுபடும். மேலும் வொர்ஸ்ட்கேஸ்/பெஸ்ட்கேஸ் காட்சி நிகழும்போது இந்த மதிப்பீடு சற்று விலகி நிற்கும். டிஸ்கவுன்ட் ரேட்டின் எதிர்பார்ப்பு ஒரு நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் நிறைய வித்தியாசப்படும். ஆகவே, நிறுவனத்தின் மதிப்பும் மாறுபடும். நீண்ட கால கேஷ் ஃப்ளோவின் அடிப்படையில் மதிப்பிடுவதால், இந்த முறை குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு உதவியாக இருக்காது.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Thursday, June 2, 2011

உங்கள் ஹெல்த் பாலிசி முழுமையானதா?

உங்கள் ஹெல்த் பாலிசி முழுமையானதா?

திலுமே அரைகுறையாக இருக்காமல் முழுமையாக இருந்தால்தான் அதன் பயனை முழுவதுமாக அனுபவிக்க முடியும். இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் குறிப்பாக மெடிக்ளைம் பாலிசிகளில் அதே கதைதான்.
முழுமையாக கவரேஜ் தரும் மெடிக்ளைம் பாலிசிகளை எடுப்பதன் அவசியம் பற்றி நமக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார் பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
''பெரும்பாலோர் அடிப்படை பாலிசியைத்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். இதில் திடீர் உடல் நலக்குறைவு, விபத்தில் சிக்கினால் அதுக்கான சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே கிளைம் கிடைக்கும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் காலத்தில் சம்பள இழப்பு, தீவிர நோய் பாதிப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு பெற சில ஆயிரம் ரூபாயை பிரீமியமாகக் கட்டி சில ரைடர்களையோ அல்லது புதிய பாலிசிகளையோ எடுத்துக் கொள்வது அவசியம்'' என்றவர் அந்த பாலிசிகள் பற்றியும் விளக்கிச் சொன்னார்.
ஹாஸ்பிட்டல் கேஷ் கவர்!
ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது ஏற்படும் சம்பள இழப்புக்கு 'ஹாஸ்பிட்டல் கேஷ் கவர்’ என்கிற ரைடர் பாலிசியை எடுக்க வேண்டும். இந்த பாலிசியின்படி நம் சம்பளத்தில் ஒரு பகுதி இழப்பீடாக கிடைக்கும். மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்தால், எல்லா நாட்களுக்கும் இழப்பீடு கிடைக்காது. பாலிசியில் குறிப்பிட்டிருக்கும் நாட்களுக்குத்தான் பணம் கிடைக்கும். அதனால், பாலிசி எடுக்கும்போது எத்தனை நாட்களுக்கு இந்த நிதி உதவி தேவை என்பதைக் குறிப்பிட வேண்டும். அதிக நாட்களுக்கு வேண்டும் என்றால் அதிக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.

கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி
புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற தீவிர நோய் பாதிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ள 'கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி’ எடுக்க வேண்டும். இது லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என இரண்டிலும் கிடைக்கும். லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடராக வழங்கப்படுகிறது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இதை தனி பாலிசியாக தருகின்றன. சில ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இந்த கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ் சேர்த்தே வழங்குகிறது. ஆனால், அதற்குக் கூடுதலாக பிரீமியம் இருக்கும்.
இதுபோன்ற நேரங்களில் தனியாக 'கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி’ எடுக்க வேண்டியதில்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் ரைடர் பாலிசிக்கான பிரீமியத்தைவிட ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தரும் தனி பாலிசிக்கு  பிரீமியம் அதிகம். உதாரணமாக, தனி பாலிசி என்கிறபோது 2 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு சுமார் 1,500 ரூபாய்  பிரீமியம் கட்ட வேண்டும். இதுவே ரைடர் பாலிசி என்கிற போது இதில் பாதி தொகைதான் பிரீமியமாக இருக்கும்.
'கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி’யில் ஒரு நிறுவனம் எட்டு தீவிர நோய்களுக்கு கவரேஜ் உண்டு என்று சொல்லும். வேறு ஒரு நிறுவனம் பத்து தீவிர நோய்களுக்கு கவரேஜ் என்று சொல்லும். எந்த நிறுவனம் அதிகமான நோய்களுக்கு கவரேஜ் கொடுக்கிறது என்பதைக் கவனித்து பாலிசி எடுத்துக் கொள்வது லாபகரமாக இருக்கும்.
தீவிர நோய்களுக்கான மருத்துவச் செலவு அதிகம். அவற்றுக்கான சிகிச்சைக் காலம் அதிகம். இந்த நிலையில், வேலைக்குப் போக முடியாமல் சம்பள இழப்பும் ஏற்படலாம். சில ஆயிரம் ரூபாய் கூடுதல் பிரீமியம் கட்டி முழுமையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்தால் நிலைமையை சுலபமாக சமாளிக்கலாமே!
- செ.திருக்குறள் அரசி.

Source - Vikatan Magazine

Wednesday, June 1, 2011

குரோத் - டிவிடெண்ட் எது பெஸ்ட்?

குரோத் - டிவிடெண்ட் எது பெஸ்ட்?


'இந்த படத்துக்குப் போகலாமா அல்லது அந்த படத்துக்குப் போகலாமா என்பது தொடங்கி பல விஷயங்களில் நாம் ஒற்றையா, ரெட்டையா போட்டு முடிவு எடுப்பதுண்டு. அதையே முதலீட்டு விஷயத்திலும் பயன்படுத்தினால்?
சிலர் இப்படித்தான் முதலீடு சம்பந்தமான விஷயங்களிலும் முடிவு செய்கிறார்கள். உதாரணமாக, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வதா, அல்லது டிவிடெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்வதா என்று குழம்பி, கடைசியில் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்து விடுகிறார்கள்! யாருக்கு குரோத் ஆப்ஷன், யாருக்கு டிவிடெண்ட் ஆப்ஷன் பொருந்தும் என்பதைத் தெளிபடுத்தவே இந்த கட்டுரை.
டிவிடெண்ட் ஆப்ஷன்!

ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை நமக்கு அளிப்பதுதான் டிவிடெண்ட் ஆப்ஷன். உண்மையைச் சொல்லப் போனால், நமது பணத்தை எடுத்து, நமக்கே கொடுத்துவிடுவது டிவிடெண்ட். இடையிடையே செலவுக்குப் பணம் தேவைப்படுகிறவர்கள் இந்த டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பாக, குடும்பஸ்தர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.  
இந்த டிவிடெண்டை பொறுத்தவரையில் குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக வழங்கப்படும் என்பது கிடையாது. சம்பந்தபட்ட ஃபண்ட் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்து டிவிடெண்ட் அறிவிப்பு இருக்கும். டிவிடெண்ட் கட்டாயம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், கடந்த காலத்தில் ஓரளவுக்கு தொடர்ச்சியாக டிவிடெண்ட் கொடுத்த ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். 
டிவிடெண்ட் அறிவித்தபிறகு அந்த தொகைக்கு ஏற்ப ஃபண்டின் என்.ஏ.வி. தடாலடியாகக் குறையும். அதாவது, என்.ஏ.வி.
17 ரூபாய். டிவிடெண்ட் 3 ரூபாய் என்றால் என்.ஏ.வி. மதிப்பு 14 ரூபாயாக குறைந்துவிடும். மேலும், டிவிடெண்ட் யூனிட்டின் முகமதிப்புக்குத்தான் அளிக்கப்படும். ஒரு யூனிட்டின் முகமதிப்பு 10 ரூபாய். 10% டிவிடெண்ட் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு ரூபாய் கிடைக்கும்.
இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்வதன் மூலம் கூடுதல் வரிச்சலுகையைப் பெறலாம்.  உதாரணத்துக்கு, 50,000 ரூபாயை இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் மே மாதத்தில் முதலீடு செய்கிறோம்.  சில மாதங்களுக்குப் பிறகு 5,000 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கிறது. இந்த டிவிடெண்டுக்கு வரி இல்லை. இந்த 5,000 ரூபாயை இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்து அந்த தொகைக்கும் வரிச்சலுகை பெறலாம். அதாவது. 50,000 ரூபாயில் 55,000 ரூபாய்க்கு வரிச்சலுகை பெறலாம். 

குரோத் ஆப்ஷன்!
நடுவில் பணம் தேவையில்லை; நீண்ட காலம் ஃபண்டில் பணமிருந்தாலும் நல்ல லாபம் வேண்டும் என நினைக்கிறவர்கள் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம். ஈக்விட்டி ஃபண்டுகளை பொறுத்த வரையில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு நீண்டகால மூலதன ஆதாயவரி இல்லை என்பது லாபகரமான விஷயம். ஆனால், சந்தை இறங்கும் பட்சத்தில் உங்கள்  லாபம் குறைய வாய்ப்புண்டு என்பதை மறக்கக்கூடாது. அந்த வகையில் இது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏற்ற ஆப்ஷன் எனலாம். 
வருமானத்தைப் பொறுத்த வரையில் இரு ஆப்ஷன்களிலும் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதால் உங்கள் தேவையைப் பொறுத்து குரோத் அல்லது டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம்.
- வா.கார்த்திகேயன்

Source - Vikatan Magazine

Monday, May 30, 2011

முதலீட்டுத் திட்டங்கள் தயார்..! - வரி சேமிக்க ரெடியா?

முதலீட்டுத் திட்டங்கள் தயார்..! - வரி சேமிக்க ரெடியா?


உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்பார்கள் அனுபவசாலிகள். மாதச் சம்பளக்காரர்களின் முதல் செலவு, வரி சேமிப்புக்கான முதலீடாக இருக்கட்டும் என்பார்கள் நிதி ஆலோசகர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வரியை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மவர்களுக்கு வருவது ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான். வாங்குகிற சம்பளத்தில் பாதியை வரி சேமிக்கக் கொடுத்துவிட்டு, சண்டை சச்சரவுகளுடன் நாளைக் கடத்துவதைவிட இன்றே, இப்போதே திட்டமிட்டால் கடைசிநேர டென்ஷனும் இருக்காது. நல்ல லாபம் தரும் திட்டத்திலும் முதலீடு செய்து அதிக லாபத்தையும் சம்பாதிக்க முடியும்.
வரி சேமிப்புக்கான முதலீடு செய்வதற்குமுன் முக்கியமாக இரண்டு விஷயங்களை ஒருவர் செய்தாக வேண்டும். அதில், முதலில் வருவது ஆயுள் காப்பீடு பாலிசி. இதுநாள் வரை நீங்கள் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்த தில்லையா? முதல் காரியமாக அதை எடுங்கள். அதன் கவரேஜ் உங்கள் ஆண்டு சம்பளத்தைப்போல் பத்து மடங்குக்கு மேல் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் முடியும் பட்சத்தில் கூடுதல் பிரீமியம் கட்டி கவரேஜை அதிகரித்துக் கொள்ளுங்கள். அல்லது புது பாலிசியை எடுங்கள். குறைந்த செலவில் அதிக கவரேஜ் என்கிறபோது டேர்ம் பிளான் சரியானதாக இருக்கும்.
இரண்டாவது, மருத்துவச் செலவு என்பது ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கும் நிலையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியத்திலும் அவசியம். இந்த இரண்டு விஷயங் களையும் நீங்கள் ஏற்கெனவே செய்து முடித்தாகி விட்டது எனில், இனி அடுத்த விஷயங்களுக்குப் போகலாம்.
நடப்பு 2011-12 ஆண்டில் வரியை மிச்சப்படுத்த எந்தெந்த வழிகள் இருக்கின்றன என்ற விவரம் இதோ..!
பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்)
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் பிடிக்கப்படும். இந்த முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. இதில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு இப்போது 9.5% வட்டி கொடுக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்த வட்டி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக கொஞ்சம் பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்வது லாபமாக இருக்கும். முற்றிலும் பாதுகாப்பான முதலீடு இது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது.
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)
அமைப்பு சாராத தொழிலா ளர்களுக்காக கொண்டு வரப்பட்டி ருக்கும் இந்த திட்டத்தில் யார் முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும். நிதி ஆண்டில் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டும்தான் வரிச்சலுகை பெற முடியும். இதுவும் முற்றிலும் பாது காப்பான முதலீடு. 15 ஆண்டுகாலத் திட்டமான இதில், வட்டி 8%தான் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். வருமானத்துக்கு வரி இல்லை.

ஃபிக்ஸட் டெபாசிட்
ஐந்தாண்டு காலம், லாக் இன் பீரியட் கொண்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வரிச்சலுகை பெறலாம். வட்டி 8.5-9%. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி. பி.பி.எஃப்.வுடன் ஒப்பிடும்போது, குறைந்த லாக் இன் பீரியட். ஆனால், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி)
தபால் அலுவலக சேமிப்பு பத்திரத்தில் செய்யப்படும் இந்த முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆறு ஆண்டுகாலத் திட்டமான இதில் வட்டி 8% கிடைக்கும். பாதுகாப்பான முதலீடுதான். ஆனால், வட்டிக்கு வரி கட்ட வேண்டி வரும்.
பென்ஷன் பிளான்
இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் பென்ஷன் திட்ட முதலீட் டுக்கு வரிச்சலுகைக் கிடைக்கும். புதிய பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச்சலுகை உண்டு. பென்ஷன் தொகைக்கு வரி உண்டு. பி.எஃப். திட்டத்தில் சேர முடியாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் இவற்றில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
ஐந்தாண்டுகள் 'லாக் இன் பீரியட்’ கொண்ட மூத்த குடி மக்கள் சேமிப்புத் திட்டம் தபால் அலுவலங்களில் இருக்கிறது. இதில் 9% வட்டி கிடைக்கும். வருமானத் துக்கு வரி உண்டு.
வரி சேமிப்பு ஃபண்ட்
அதிக வருமானம் வேண்டும், வருமானத்துக்கு வரி இருக்கக் கூடாது. ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை என்கிறவர்களுக்கு ஏற்ற வரிச் சேமிப்பு முதலீடாக 'பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்’ (இ.எல்.எஸ்.எஸ்) திட்டம் இருக்கிறது. ஒரு நேரத்தில் குறைந்தது 500 ரூபாய்கூட இதில் முதலீடு செய்யலாம் மூன்றாண்டு கால 'லாக் இன் பீரியட்’, டிவிடெண்ட் மற்றும் வருமானத் துக்கு வரி இல்லை. ஆனால், பங்குச் சந்தை சரியும் பட்சத்தில் நம் முதலீடு கொஞ்சம் குறையவும் வாய்ப்புண்டு என்பதை மறந்து விடக் கூடாது.
ஆயுள் காப்பீடு பாலிசிகள்
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. டேர்ம் பிளான், எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கு கட்டப்படும் பிரீமியம் மற்றும் ஆதாயத்துக்கு வரி இல்லை.
வீட்டுக் கடன் அசல்
குடியிருப்பதற்காக வீட்டைக் கடனில் வாங்கியிருந்தால், திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இருக்கிறது. கணவன்/மனைவி சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடன் வாங்கி, தனித் தனியாக வரி விலக்கு கோரினால் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும்.
கல்விக் கட்டணம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கு பெற்றோர் கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை கோரலாம். இந்த சலுகை இரண்டு பிள்ளைகளுக்குதான் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் பட்சத்தில் இரு பிள்ளைகள் என்றால் ஒருவருக்கு தந்தையும், மற்றவருக்கு தாயும் வரிச்சலுகை பெறலாம்.
மேற்கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து நிதி ஆண்டில் 80 - சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்.
செலவுகளுக்கும் வரிச்சலுகை
நாம் செய்யும் பல முக்கிய செலவுகளுக்கும் வரிச்சலுகை கிடைக்கும்.
வீட்டு வாடகை - 10 (13 ஏ)
வசிக்கும் வீட்டுக்கு கொடுக்கும் வாடகைக்கு வரி தள்ளுபடி பெறமுடியும். வசிக்கும் நகரம், பணியாளர்பெறும் வீட்டு வாடகைப்படி ஆகியவற்றைப் பொறுத்து இந்த வரிக் கழிவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிட மிருந்து ரசீது பெறுவதோடு, அவரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.
மெடிக்ளைம் - 80 டி
தனக்கு மற்றும் தன் குடும்பத்துக்கான மெடிக்ளைம் பிரீமியத்தில் ஆண்டுக்கு 15,000 ரூபாய் (மூத்த குடிமக்களுக்கு 20,000 ரூபாய்) வரை வரிச்சலுகை கிடைக்கும். பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் சேர்த்து பிள்ளைகள் வரிச்சலுகை பெற முடியும்.

கல்விக் கடன் - 80 இ
வரி கட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கும்/வாங்கிய கடனில் வட்டியில் வரிச்சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு கட்டும் வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும். திரும்பக் கட்டும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை.
வீட்டுக் கடன் வட்டி - 24 பிரிவு
திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் வட்டியில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 1.5 லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத் தில் முழுவட்டிக்கும் வரிச்சலுகை உண்டு. ஆனால், வாடகையை வருமானமாக காட்டியிருக்க வேண்டும்.
கவனிக்க..!
புதிய வருமான வரிச் சட்டம் 2012-13-ம் ஆண்டில் அமல் படுத்தப்பட இருக்கிறது. அதில், தற்போதுள்ள பல விஷயங்கள் மாற்றப்படுகிறது. குறிப்பாக, இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பிளான் மற்றும் ஆண்டு பிரீமியத்தைபோல் 20 மடங்கு கவரேஜ் இருக்கும் பாலிசிகளுக்கு தான் வரிச்சலுகை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு இப்போதே பாலிசி எடுப்பது அவசியம்.
இதேபோல் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டுக்கு தற்போதைய நிலையில் புதிய வருமான வரிச் சட்டத்தில் வரிச்சலுகை இல்லை. எனவே, ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்பவர்கள், 2012 மார்ச் மாதம் முடியும்படி பார்த்துக் கொள்ளவது நல்லது.
சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. இனி உடனடியாக களத்தில் இறங்க வேண்டியது நீங்கள்தான்!
- சி.சரவணன்

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 26

முதற்படி முதலில் படி!

ரு அத்தியாயங்களில் சில மதிப்பீட்டு முறைகள் பற்றி கண்டோம். இப்போது மதிப்பீட்டு முறைகளின் தொடர்ச்சியாக, 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட் முறை’ (Replacement Cost Method) பற்றி காண்போம். இம்முறைக்கும் புத்தக மதிப்பு முறைக்கும் சிறிய தொடர்பு உண்டு என்று கூறலாம். புத்தக மதிப்பு முறை கடந்த கால (புத்தகத்தில் உள்ள மதிப்பு) மதிப்பைக் கொண்டு கணக்கிடுவதாகும்.
னால், 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட் முறை’ தற்போது அந்த தொழிலைத் தொடங்கினால் எவ்வளவு செலவாகும் என்று கணக்கிடுவதாகும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஜல்லி உடைக்கும் தொழிற்சாலையை நடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தொழில் தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சில காரணங் களினால் உங்களால் தொழிலை சரிவர நடத்த முடியவில்லை என்பதால் அதை வேறு யாருக்காவது விற்றுவிட முடிவு செய்கிறீர்கள். உங்கள் தொழிற் சாலையில் உள்ள இயந்திரங்கள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளன - தேய்மானத்தைத் தவிர! உங்கள் தொழிற்சாலையின் புத்தக மதிப்பு ரூபாய் ஐந்து லட்சம். ஆனால், விற்பதற்காக நீங்கள் சொல்லும் விலையோ, ரூபாய் பத்து லட்சம்.
உங்கள் ஊரில் கட்டடம் கட்டும் புரமோட்டர் ஒருவர் உங்கள் தொழிற்சாலையை வாங்க விருப்பமாக இருக்கிறார். ஏற்கெனவே நடந்துவரும் ஒரு தொழிற்சாலையை வாங்குவதற்கும், புதிதாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தையும் கணக்குப் போட்டு பார்க்கிறார். இன்றைய நிலையில் புதிதாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்க 15 லட்ச ரூபாய் ஆகும் என்பது அவர் போட்ட கணக்கு. அதே சமயம், உங்கள் தொழிற்சாலையின் உபகரணங்கள் பழையதாக இருப்பதால் நீங்கள் பத்து லட்சம் தான் கேட்கிறீர்கள். அவருக்கோ ஐந்து லட்ச ரூபாய் குறைவில், இயங்கிக் கொண்டிருக்கும்   தொழிற்சாலை கிடைக்கிறது என்று நினைத்து உங்களுடன் பேச ஆரம்பிக்கிறார்.  ஆக வாங்குபவர் 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்’டை ஒப்பிட்டுப் பார்த்து உங்களிடம் டீல் பேசுகிறார். தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கும்பட்சத்தில், 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்’டைவிட கொஞ்சம் அதிகமாகவே நீங்கள் கேட்கலாம். இந்த 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்’டை எவ்வாறு கணக்கிடலாம்?
உபகரணங்களுக்கான விலையை இரண்டு அல்லது மூன்று தயாரிப்பாளர்களிடம் 'கொட்டேஷன்’ கேட்டுப் பெறலாம். இடத்தின் விலைக்கான மதிப்பை அறிந்து கொள்ளலாம். கட்டடம் மற்றும் மதில் சுவர் கட்டுவதற்கான கொட்டேஷனை ஒரு என்ஜினீயரிடம் பெறலாம். இயந்திரங்களை அமைப்பதற்கான செலவை நீங்கள் இயந்திரம் வாங்கப் போகும் நிறுவனத்திடமே கொட்டேஷனாகப் பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களுக்கான விலையை ஒரு வாகன டீலரிடம் இருந்து கொட்டேஷனாகப் பெறலாம். மீதி விலைகளை உங்களுக்குத் தெரிந்த அளவில் நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லது ஒரு கன்சல்டன்ட் உதவியை நாடலாம். பெரிய தொழிற்சாலையாக இருக்கும் பட்சத்தில் பெஞ்ச்மார்க் ரேட்டை எடுத்துக் கொண்டு 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்’டை கணக்கிடலாம்.
இந்த மதிப்பீட்டு முறையில் சாதக-பாதகங்கள் என்னென்ன?

பாதகங்கள்:
இந்த முறையில் தொழிலில் இருந்துவரும் கேஷ் ஃபுளோவோ அல்லது தொழிலின் மதிப்பையும் எதிர்கால வாய்ப்புக் களையும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இது அன்றைய தேதியில் ஒரு தோராய மான மதிப்புத்தானே தவிர மிகவும் துல்லியமானது என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதை ஒரு ஒப்பீட்டு மதிப்பாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, இதையே மதிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது - ஏனென்றால் தொழிலில் வேறு பல காரணிகள் உள்ளன.
சாதகங்கள் என்று பார்த்தால் ஒரு தொழிலை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த முறை ஓர் அருமையான உபகரணமாகும். அதிக விலை கொடுக்கிறோமா, குறைவான விலை கொடுக்கிறோமா அல்லது சரியான விலைதான் கொடுத்து வாங்குகிறோமா என்பது தெரியவரும். அதைப்போலவே பங்குச் சந்தையில் சில துறைகள் சில சமயங்களில் சில காரணங் களுக்காக அடிபட்டு இருக்கும். அப்போது அப்பங்குகள் 'ரீப்ளேஸ் மென்ட் காஸ்ட்’டைவிட மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும். கான்ட்ரா முதலீட்டாளர்கள் அதுபோன்ற பங்குகளை குறி வைத்து வாங்கிச் சேர்ப்பார்கள்.
அதிக கடன் உள்ள நிறுவனங்கள், 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்’டைவிட மிகக் குறைவான விலையில் சில சமயங்களில் கிடைக்கும். அதுபோன்ற தருணங்களில் மீதி அளவுகோல்களை கண்டறிந்து கவனத்துடன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்.
வொர்ஸ்ட் கேஸ்/பெஸ்ட் கேஸ் முறை:
பொதுவாக எந்த ஒரு சொத்தையும் வாங்குபவர் அது இன்னும் விலை ஏறும் அல்லது அதனால் அவருக்கு லாபம் உண்டாகும் என்று நினைத்து வாங்குவார். சொத்தை விற்பவர் அதற்கு எதிர்மறையாக சிந்திப்பார். சுருக்கமாகச் சொன்னால், வாங்குபவர் பாசிட்டிவ் ஆகவும், விற்பர் நெகட்டிவ் ஆகவும் சிந்திப்பார்கள். பாசிட்டிவ் ஆக நினைப்பவர் எல்லாமே நல்லதாக நடக்கும் என்று நினைப்பார். அதனால் வாங்கும்போது சற்று விலை அதிகமாக கொடுத்து வாங்க தயங்க மாட்டார். ஆனால், வாங்கியபிறகு அந்த சொத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. அப்போது சற்று அதிக விலை கொடுத்து வாங்கியவர் மனச்சோர்வுக்கு உள்ளாவார். அவ்வாறு சோர்வடையாமல் இருப் பதற்குத்தான் இந்த வொர்ஸ்ட் கேஸ்/பெஸ்ட் கேஸ் ஆய்வு.
எந்த ஒரு முதலீடானாலும் (பங்கு முதலீடு உட்பட) ஏற்ற இறக்கம் இருக்கும். முதலீடு செய்தபிறகு அதன் விலை நமது கட்டுப்பாட்டில் இருக்காது. ஆனால், என்ன விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆகவே, நமது முதலீட்டில் வெகுவாக பணத்தை இழக்கக் கூடாது என்றால், பங்குகளையோ அல்லது தொழில்களையோ அல்லது சொத்தையோ வாங்கும் போது மிக கவனத்துடன் வாங்க வேண்டும். வாங்குவதற்கு முன்னால் செய்யும் ஆய்வில், இந்த சொத்தை (அனைத்தும் இந்த வார்த்தைக்குள் அடக்கம் - பங்கு முதலீடு உட்பட) உலகமே கவிழ்ந்து விடும் நிலையில் இருந்தால் எந்த விலைக்கு வாங்கலாம் என்று ஆராய வேண்டும். அதுதான் வொர்ஸ்ட் கேஸ் விலை. இதற்கு அந்த சொத்தின் கடந்த கால விலையையும் (மிகவும் மோசமான நேரங்களில்) உபயோகித்துக் கொள்ளலாம். பங்குச் சந்தையில் 52 வார லோ மற்றும் லைஃப் டைம் லோ போன்ற விலைகளை வாங் கும் முன்பு பார்க்க வேண்டும்.
அதேபோல் உலகமெல்லாம் ரோஜாப் பூக்களாக இருந்தால் (எல்லாமே நல்லதாக இருந்தால்) இந்த சொத்தின் விலை என்னவாக இருக்கும் என்பதையும் ஆராய வேண்டும். பங்குச் சந்தையில் 52 வார ஹை மற்றும் லைஃப் டைம் ஹை விலைகளை ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது பெஸ்ட் கேஸ் விலை ஆகும். இந்த இரண்டு விலைகளையும் ஆராயும்போது நாம் சரியான விலைதான் கொடுத்து வாங்குகிறோமா அல்லது எந்த அளவு பிரீமியத்தில்/ டிஸ்கவுன்டில் வாங்குகிறோமா என்பது புரியவரும்.
இந்த ஆய்விற்கு வளர்ந்த நாட்டுப் பொருளாதாரங்கள், கடந்த பல ஆண்டுகளில் மிகவும் மோசமான மற்றும் சிறப்பான காலங்களில் எவ்வளவு வருமானத்தைத் தந்துள்ளன அல்லது எவ்வளவு குறைவாக/அதிகமாக சொத்துக்களின் விலை கள் சென்றுள்ளன என்பதை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வட்டி விகித ஏற்றயிறக்கம்போல், சுழற்சியில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வட்டி விகிதம் குறைவாக இருப்பது பங்குச் சந்தைக்கு நல்லது. அதிகமாக இருந்தால் நிறுவனத்தின் லாபம் குறைந்து, பங்கு விலைகளிலும் வீழ்ச்சி ஏற்படச் செய்யும். அதே சமயம் வட்டி விகிதம் ஏறாமலே இருப்பது (ஜப்பானைப் போல்) பொருளாதாரம் அடிபட்டு கிடப்பதைக் குறிக்கும். அதுவும் நல்லதல்ல.
உதாரணத்திற்கு வட்டி விகிதங் கள் அதிகமாக இருக்கும்போது வங்கிப் பங்குகளை வாங்கினால் விலை மலிவாகக் கிடைக்கும். ஆகவே, அப்பங்குகள் சென்ற வட்டிவிகித சுழற்சியில் என்ன விலையில் கிடைத்துள்ளன என்று நிகழ்கால விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது அதன் விலை பிரீமியத்தில் (அதிகமாக) உள்ளதா அல்லது டிஸ்கவுன்டில் (குறைவாக) உள்ளதா என்று தெரியவரும். அதை வைத்து இந்த பங்கை வாங்க இது சரியான தருணமா அல்லது விற்கத் தகுந்த தருணமா என்று தெரிந்து கொள்ளலாம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine