Pages

Saturday, July 16, 2011

முதற்படி முதலில் படி! - 33

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
கடந்த சில வாரங்களாக பங்குகளை மதிப்பிடுவது எப்படி என்பது பற்றி கண்டறிந்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை வியூகம் (strategy) பற்றி பார்ப்போம். நம்மில் பலர் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை சந்தித்திருப்போம். அது பள்ளியில் ஆகட்டும், கல்லூரியில் ஆகட்டும், வேலையில், தொழிலில், வாழ்க்கையில் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்து பாருங்கள். பெரும்பாலும் நீங்கள் கடைப்பிடித்த வியூகமாகத்தான் இருக்கும். இதனை சிலர் செயல்திட்டம் என்கிறார்கள். இன்னும் சிலர் உத்தி என்றும், தந்திரம் என்றும் சொல்கிறார்கள். நாம் வியூகம் என்போம்.
பொதுவாக வியூகம் என்பது எப்போது தேவை? போர்க்களத்தில்தான். போரில் எப்படி ஜெயிப்பது என்று வரும்போது நமக்கு ஒரு செயல்திட்டம் வேண்டும். இந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற வழி அமைத்துக் கொடுப்பதுதான் வியூகம். பங்குச் சந்தை என்பது ஒரு போர்க்களம் என்று சொல்கிற அளவுக்கு பயங்கரமான விஷயமில்லை என்றாலும், நீங்கள் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவதற்கு சரியான வியூகம் தேவை. பங்குச் சந்தை முதலீட்டில் பலரும் பலவிதமான வியூகங்களைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறுகிய காலம், குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என முதலீட்டாளரின் கால அளவைப் பொறுத்து வியூகம் மாறுபடும். நாம் இங்கு பார்க்கப் போவது நீண்டகால (ஐந்து வருடத்திற்குமேல்) முதலீட்டாளர்களுக்கான வியூகத்தைப் பற்றித்தான்.
இத்தொடரில் சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றி குறிப்பாக குரோத் இன்வெஸ்ட்டிங், வேல்யூ இன்வெஸ்ட்டிங், கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் குறித்துப் பார்த்தோம். இவற்றிற்கும் மேலாக பொதுவான வியூகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
வியூகம் 1
அன்றாட வாழ்விற்கு மற்றும் குறுகிய காலத்திலேயே தேவைப்படக்கூடிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள்.
வியூகம் 2
போர்ட்ஃபோலியோ அலோகேஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. உங்களது போர்ட்ஃபோலியோவில் அவசரத் தேவைக்கான லிக்விட் பணம், நிரந்தர வைப்புநிதி திட்டங்கள், அரசாங்க பாண்டுகள், நிலம், தங்கம், பங்குகள் என அனைத்தும் வயதிற்கேற்ப/தேவைகளுக்கு ஏற்ப இருக்கட்டும்.
வியூகம் 3
போர்ட்ஃபோலியோ பேலன்ஸிங் என்பது முக்கியமான ஒன்று. உங்கள் வயதிற்கேற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனிற்கேற்ப, உங்கள் செல்வத்தின் மதிப்பிற்கு ஏற்ப உங்களது போர்ட் ஃபோலியோவை வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள்.
வியூகம் 4
நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில், பெரிய நிறுவனப் பங்குகளில் அல்லது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். நிறுவனங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.
வியூகம் 5
நீங்கள் விரும்பிய பங்குகளை விரும்பிய விலையிலேயே வாங்குங்கள். விரட்டிச் சென்று வாங்காதீர்கள்.
வியூகம் 6
பங்கின் உண்மையான மதிப்பைவிட விலை குறைவாகக் கிடைக்கும்போது மட்டுமே வாங்குங்கள். அதேபோல் பங்கின் விலை உச்சத்தைத் தொட்டு, எந்தவிதமான வேல்யூவேஷன் வரம்புக்குள்ளும் வராமல் இருக்கும்போது துணிந்து விற்றுவிடுங்கள்.
வியூகம் 7
தரம், நிரந்தரம்! எப்போதும் தரமான நிறுவனப் பங்குகளையே வாங்குங்கள். கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும் தரமற்ற நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 8
பொறுமை கடலினும் பெரிது! தரமான பங்குகளை வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருங்கள்! (நினைவில் கொள்க: பங்கு முதலீடு என்பது சுவாரஸியமற்ற (தீஷீக்ஷீவீஸீரீ) விஷயம்.) குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து சம்பாதிப்பதற்குக்கூட 21 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நாம் வாங்கிய பங்கினை வளர்வதற்கு அனுமதிக்க வேண்டாமா?
வியூகம் 9
நம்பினோர் கைவிடப் படார்! நீங்கள் அலசி ஆராய்ந்து வாங்கிய தரமான பங்குகள் ஒருபோதும் வீண் போகாது! நம்பிக்கையுடன் காத்திருங்கள். திடமான நம்பிக்கை இல்லாமல் (நீஷீஸீஸ்வீநீtவீஷீஸீ) பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 10
இந்தியா ஒரு வளரும் நாடு என்பதால், டிவிடெண்ட் யீல்ட் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும், டிவிடெண்ட் யீல்டையும் பார்த்து பங்குகளை வாங்குங்கள். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் அது ஒன்றுதான் உங்களுக்கு அப்பங்கில் இருந்து கிடைக்கும் வருமானம்.
வியூகம் 11

உலகளவில் நிலம் மற்றும் தங்க முதலீட்டை விரும்பு பவர்களில் தமிழர்கள் முன்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். வேறு முதலீடுகளைப்போல அவை களுக்கும் ரிஸ்க் உண்டு. ஆகவே, அவற்றில் மட்டுமே ஃபோக்கஸ் செய்யாமல், பங்கு முதலீட்டை முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள்! பங்கு முதலீடு கடந்த இருபது ஆண்டுகளில் சம்பாதித்துக் கொடுத்தது எக்கச்சக்கம். இன்னும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது ஏராளம்!
பங்குச் சந்தை ஒரு கடல் போன்றது. நாம் படகை/கப்பலை எத்திசையில் செலுத்து கிறோமோ, அத்திசையில் செல்வதற்கு கடல் ஒரு தளமாக அமைகிறது. அதுபோல பங்குச் சந்தை நமக்கு ஒரு நல்ல தளம். அதை தளமாக உபயோகித்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணத்திற்கு 'பெல்’ (BHEL)போன்ற தரமான நிறுவனங்கள் தற்சமயத்தில் பல காரணங்களினால் மலிவான விலையில் கிடைக்கின்றன. எஃப்.பி.ஓ. வரும்போது இன்னும்கூட சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தரமான நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் குறித்துக் கொண்டு சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கலாம்!
பங்குச் சந்தை முதலீட்டில் தேர்ச்சி பெற்று ஒரு வெற்றிகர மான முதலீட்டாளர் ஆவதற்கு வருடங்கள் பல ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியூகம் சரிவரும். உங்களுக்கு எந்த வியூகம் பொருந்துகிறது என்று கூர்ந்து கவனித்து, தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் வியூகம் சரியா, தவறா என்பதை உங்களுக்கு கிடைக்கப் போகும் நஷ்டத்தைப் பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Tuesday, July 12, 2011

வரி தாக்கல் வழிகள்...

வரி தாக்கல் வழிகள்...




பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 32

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

சென்ற வாரத்தில் 'காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி’ மற்றும் 'டிஸ்கவுன்ட் ரேட்’டை கண்டுபிடித்தோம். இவ்வாரம் 'டெர்மினல் வேல்யூ’வை கண்டுபிடித்து, அதன்மூலம் நிறுவனத்தின் மதிப்பைக் கண்டுபிடிப்போம்.
நாம் சென்றவாரம் கூறியதுபோல, நிறுவனம் என்பது வயதில்லாதது. எப்போதும் பணத்தை ஈட்டிக் கொண்டிருக்கும். ஆனால், நாம் கண்டுபிடித்த 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ அடுத்த ஐந்து வருடங்களுக்குத்தான். அதற்குப் பிறகு வரப்போகும் 'கேஷ் ஃப்ளோ’வை கணக்கிடுவதற்குத்தான் 'டெர்மினல் வேல்யூ’வை கண்டுபிடிக்கிறோம். இந்த வேல்யூவைக் கணக்கிடுவதற்கு பலவிதமான முறைகள் இருந்தாலும், மிகவும் பரவலாக உபயோகிக்கப்படுவது 'கோர்டன் குரோத் மாடல்’ (Gordon Growth Model) என்பதாகும். அம்முறையை உபயோகித்து 'டெர்மினல் வேல்யூ’ கண்டுபிடிப்பதற்கான ஃபார்முலா கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 'டெர்மினல் வேல்யூ’வை கணக்கிடுவதற்கு நமது ஐந்தாவது வருட 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ புரஜெக்ஷனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டெர்மினல் வேல்யூ =
[கணிக்கப்பட்ட கடைசி வருட ஃப்ரீ கேஷ் ஃப்ளோ X (1 + நீண்ட கால கேஷ் ஃப்ளோ குரோத் ரேட்)] / [டிஸ்கவுன்ட் ரேட் - நீண்ட கால கேஷ் ஃப்ளோ குரோத் ரேட்]
மேற்கண்ட ஃபார்முலாவில் தமிழ்நாடு கூரியரின் (கடைசி வருட) மார்ச் 31, 2016-ம் ஆண்டின் கணிக்கப்பட்ட 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ .5.23 கோடி ( 523 லட்சம்) ஆகும். டிஸ்கவுன்ட் ரேட் சென்றவாரம் 15.41% என்று கண்டுபிடித்தோம். அடுத்த ஐந்து வருடங்களில் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவின் 'குரோத் ரேட்’ கிட்டத்தட்ட 16% என்று நாம் ஃபோர்காஸ்ட் செய்துள்ளோம். ஆனால், அதே 'குரோத் ரேட்’ எக்காலத்திலும் இருக்குமா என்றால், சந்தேகமே! ஆகவே, 'நீண்டகால கேஷ் ஃப்ளோ குரோத் ரேட்’டை நாம் 8% என வைத்துக் கொள்வோம். இந்த விவரங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'டெர்மினல் வேல்யூ’ இதோ:
டெர்மினல் வேல்யூ
= [5.23 ஜ் (1 + 8%)] /
  [15.41% - 8%]
= [5.23 ஜ் 1.08] / [0.0741]
= 76.23 கோடி
மார்ச் 31, 2016-ற்கு அப்பாற்பட்ட ஃப்ரீ கேஷ் ஃப்ளோவின் மதிப்பு 76.23 கோடி என்று கண்டுபிடித்து விட்டோம். இப்போது நாம் சில இதழ்களுக்கு முன்பு கண்டுபிடித்த மார்ச் 2016-வரைக்குமான ஃப்ரீ கேஷ் ஃப்ளோவிற்கும், மேலே கண்டுபிடித்த டெர்மினல் வேல்யூவிற்கும் நிகழ்கால மதிப்பை (என்.பி.வி அல்லது நெட் பிரஸன்ட் வேல்யூ), 15.41% என்று நாம் கண்டுபிடித்த டிஸ்கவுன்ட் ரேட்டை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும்.
சில இதழ்களுக்கு முன்பு டிஸ்கவுன்ட் ரேட்டை உபயோகித்து என்.பி.வி கண்டுபிடிப்பது குறித்து விவரமாக கண்டோம். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் புரோகிராமின் உதவியுடன் இந்த என்.பி.வி-யைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட என்.பி.வி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2012 முதல் மார்ச் 2016 வரை உள்ள ஐந்து வருட கேஷ் ஃப்ளோ மற்றும் டெர்மினல் வேல்யூ ஆகியவற்றின் என்.பி.வி 44.91 கோடியாகும். இதற்காக நாம் உபயோகித்த டிஸ்கவுன்ட் ரேட் 15.41% ஆகும். இது நிறுவனத்தின் மொத்த மதிப்பாகும். இதிலிருந்து நிறுவனம் வாங்கியிருக்கும் மொத்தக் கடனை நாம் கழித்தால் கிடைப்பதுதான் ஷேர் ஹோல்டர் ஈக்விட்டியின் மதிப்பு. நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் 3.53 கோடி கடன் வாங்கியுள்ளது என சென்ற இதழில் பார்த்தோம். ஆக, ஷேர் ஹோல்டர் ஈக்விட்டியின் மதிப்பு = 44.91 - 3.53 = 41.38 கோடியாகும்.
நாம் சென்ற இதழில் தமிழ்நாடு கூரியர் கம்பெனியின் பங்கு மூலதனம் 5.30 கோடி என்று பார்த்தோம். அதாவது, 10 முகமதிப்பைக் கொண்ட 53 லட்சம் (0.53 கோடி) பங்குகளை வெளியிட்டுள்ளது. நாம் நிறுவனத்தின் ஈக்விட்டி மதிப்பு .41.38 கோடி என்று கண்டுபிடித்துள்ளோம். ஆக, ஒரு பங்கின் மதிப்பு = 41.38/ 0.53 = 78.08 ஆகும்.
நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி மதிப்பை, வெளியிட்டுள்ள பங்குகளால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு ஷேரின் மதிப்பு. நமது தமிழ்நாடு கூரியர் கம்பெனியின் ஒரு பங்கின் நியாயமான மதிப்பு 78.08 ஆகும். இதையே 'இன்ட்ரின்ஸிக் வேல்யூ’ (intrinsic value) என்றும் கூறலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்குகிறார்களோ அவ்வளவு நன்று.
பங்குகளை மதிப்பிடும் பல்வேறு வேல்யூவேஷன் முறைகளைப் பற்றி போதுமான அளவு சொல்லி விட்டேன். இனிவரும் வாரங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வியூகங்கள், போர்ட்ஃபோலியோ, ரெகுலேஷன் போன்ற பலவற்றைப்பற்றியும் விரிவாகக் காண்போம்.
(படி ஏறுவோம்)



பியானியின் அடுத்த பிளான்!
ரீடெய்ல் துறையின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று கிஷோர் பியானியின் பாண்டலூன். கடந்த ஒரு வருட காலமாக மற்ற போட்டி ரீடெய்ல் நிறுவனங்கள் ஏறுமுகத்தில் இருக்கும்போது, இந்த நிறுவனம் மட்டும் சரிவிலேயே இருக்கிறது. காரணம், இந்நிறுவனத்துக்கு இருக்கும் ஏராளமான கடன்கள்தான்.
இந்நிலையில் திடீரென கடனை அடைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பியானி. இதற்காக 'ஃபியூச்சர் கேபிட்டல் ஹோல்டிங்’ நிறுவனத்தில் பாண்டலூன் முதலீடு செய்திருக்கும் 54 சதவிகித பங்குகளை விற்க முடிவு செய்திருக் கிறார். 'ஃபியூச்சர் கேபிட்டல் ஹோல்டிங்’ நிறுவனமும்  'பாண்டலூன் ரீடெய்ல்’ நிறுவனமும் ஃபியூச்சர் குழுமத்தின் அங்கங்கள்தான்!
இதற்கிடையே பாண்டலூன் நிறுவனத்தின் கடனைக் குறைப்பதில் பியானி காட்டும் ஆர்வத்துக்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள்... விரைவில் ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு அரசு பச்சைக்கொடி காட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ரீடெய்ல் வட்டாரத்தில் பலமாக இருக்கிறது. அப்படி அனுமதி கிடைத்துவிடும்பட்சத்தில், கடனில் தவிக்கும் பாண்டலூனில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் போய்விடக்கூடும் என்பதால்தான் இந்த வேகம் காட்டுகிறார் பியானி. பிழைக்கத் தெரிந்த பிஸினஸ்மேன்தான்!

வா.கார்த்திகேயன்.

 
Source - Vikatan Magazine

Monday, July 4, 2011

விலைவாசி எவ்வளவு ஏறினால் என்ன!

விலைவாசி எவ்வளவு ஏறினால் என்ன!


ன்றைக்கு பலரின் மனதை அரிக்கும் கேள்வி, 'விஷமாய் ஏறும் விலைவாசியைச் சமாளிக்க ஏதாவது வழி இருக்கிறதா’ என்பதுதான்! இதற்கு ஒன்றல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன! முதல் வழி, 'வரவுக்கு ஏற்ற செலவு.’ இரண்டாவது 'செலவுக்கு ஏற்ற வரவு!’
முதல் வழி சிக்கன வழி. சிக்கனமாக வாழ நினைக்கும் இந்த முயற்சி சிறந்த ஒன்றுதான். ஆனால், தினம்தோறும் ஏறும் விலைவாசியில் எவ்வளவு காலம்தான் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டி சமாளிப்பது!
அப்படிப் பார்க்கும்போது இரண்டாவது வழியை ஏன் முயற்சிக்கக் கூடாது? எவ்வளவு செலவு ஆகிறதோ அதைசம்பாதிக்க நினைப்பதுதான் இன்றைக்குப் பொருத்தமாக இருக்கும்.
செய்துகொண்டிருக்கும் வேலையைத் தாண்டி, கிடைக்கும் நேரத்தையும் வாய்ப்பையும் பயன்படுத்தி எப்படி எல்லாம் எக்ஸ்ட்ரா வருமானத்தைப் பார்க்கலாம்?
 இதோ அப்படி எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வழிசெய்து கொண்டிருக்கும் சிலர், தங்களது அனுபவத்தை இங்கே சொல்கிறார்கள்... உங்களுக்குள் ஓர் உத்வேகத்தை அது நிச்சயம் ஏற்படுத்தும். உங்களுடைய வாய்ப்புக்கும் வசதிக்கும் தகுந்த ஒரு வேலையை நீங்களே தேர்ந்தெடுத்து, வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அது நிச்சயம் உதவும்.
பிறகென்ன விலைவாசியாவது வெங்காயமாவது!









குழப்பமே உன் பெயர்தான் வரியா? - வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்...

குழப்பமே உன் பெயர்தான் வரியா?

அரசு உத்தரவு... அலறும் மக்கள்!
ருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றாலே நம்மில் பலரும் பள்ளிக்கூடத்து குழந்தைகள் மாதிரி அழுவார்கள். வருடத்துக்கு ஒருமுறை அத்தனை ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு ஆடிட்டரிடம் போய், கணக்குக் காட்டி முடிப்பதற்குள் பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும்.
இதுமாதிரி நினைக்கிறவர்களின் காதுகளுக்கு தேன் பாய்ச்சுகிற ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு. 'உங்கள் வரிக்கு உட்பட்ட  வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்குள் இருக்கும் பட்சத்தில், இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை’ என்பதே அது. மத்திய நேரடி வரி வாரியத்தின் இந்த அறிவிப்பின்படி முடிந்த 2010-11-ம் நிதி ஆண்டில் (வரி கணக்கீட்டு ஆண்டு 2011-12) வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்குள் இருந்தால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தேவையில்லை.
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தைக் கணக்கிடுவதற்கு முன் வரித் தள்ளுபடிகள் மற்றும் முதலீட்டுச் சலுகை கள் இருக்கின்றன. வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் பி.எஃப்., பி.பி.எஃப்., ஆயுள் காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் அசல், இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட், குழந்தைகளின் கல்விக் கட்டணம் போன்றவற்றுக்கு வரிச் சலுகை இருக்கிறது. மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் 15,000-20,000 ரூபாய். வீட்டுக் கடனுக்கான வட்டி 1.5 லட்ச ரூபாய்க்கும் வரித் தள்ளுபடி இருக்கிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் முக்கிய முதலீடு மற்றும் செலவுகள் எல்லாம் சேர்த்தால் மொத்த வருமானம் சுமார் 7.5 லட்ச ரூபாய் இருந்தால்கூட, ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்குள் வந்துவிடும் என்பதால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது இருக்காது. 
ரிட்டர்ன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் மத்திய அரசு, முக்கிய நிபந்தனை ஒன்றையும் போட்டிருக்கிறது. அதாவது, வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் ஒரு நிதி ஆண்டில் பெறப்படும் வட்டி 10,000 ரூபாய்க்குள் இருந்தால் அதை மொத்த வருமானத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவரத்தை பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதற்கு வரிகட்ட வேண்டியிருந்தால் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.) செய்து அரசுக்கு கட்டிவிடுவார்கள். இந்த டி.டி.எஸ். விவரம் ஃபார்ம் 16-ல் குறிப்பிடப்படும். இதற்கு பணியாளர் அவரின் பான் எண்ணை பணிபுரியும் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். ஃபார்ம் 16-தான் வருமான வரி கணக்குக்கான ஆதாரம் என்பதால் அதனை நிறுவனத்திடம் கேட்டு வாங்கிக் கொள்வது அவசியம்.
வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும் வேறு சில காரணங்களுக்காக வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
அதிகமாகக் கட்டிய வரியைத் திரும்பப் பெற வேண்டும் (ரீஃபண்ட்) எனில்..!
பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஃபார்ம் 16-ஐ பெறவில்லை எனில்..!
பணியாளர் ஒருவர், ஒரு நிதி ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் பட்சத்தில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிதி ஆண்டில் சம்பாதித்த மொத்த வருமானத்தை குறிப்பிட்டு ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்!
ஒரு நிதி ஆண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வட்டி 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்..!
வரி பிடிப்பதற்காக வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி வருமான விவரத்தை பணிபுரியும் நிறுவனத்திடம் கொடுக்காதவர்கள்..!
பங்குகள், ஃபண்டுகள், மனை, வீடு, தங்கம் போன்றவற்றின் விற்பனை மூலமான மூலதன ஆதாயம் இருக்கும் பட்சத்தில் வரி கட்ட வேண்டியதில்லை என்றாலும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்!
வீட்டு வாடகை வருமானம், பிஸினஸ் அல்லது தொழில் மூலமான வருமானம் இருந்தால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 
வரிக் கணக்கு விவரம் தாக்கல் செய்யச் சொல்லி வருமான வரித் துறையினரால் ஏற்கெனவே நோட்டீஸ் பெற்றவர்கள், கட்டாயம் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
2011-12-க்கு (வரிக் கணக்கீட்டு ஆண்டு) முந்தைய ஆண்டுகளுக்கு வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியவர்கள்..!
''இந்த அறிவிப்பு அதிகம் பேருக்கு பலன் தராது என்றே சொல்ல வேண்டும்'' என்கிறார்கள் பெரும்பாலான ஆடிட்டர்கள். அவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
''அனைத்துப் பணியாளர்களும் பணிபுரியும் நிறுவனத்திடம் சேமிப்புக் கணக்கு வட்டி விவரத்தை தெரிவிப்பார்கள் என்று சொல்ல முடியாது. மேலும், பெரும்பாலோருக்கு பல வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இருக்கும். அந்த வருமானத்தை எல்லாம் சேர்த்து மொத்தமாகக் கொடுப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கும்.
மேலும், பல நிறுவனங்களில் ஏற்கெனவே பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதில் பணியாளர்களின் வங்கிச் சேமிப்பு வட்டி விவரத்தை சேர்த்து ஃபார்ம்-16 தயாரிப்பது, அரசுக்கு வரி கட்டுவது என்பது கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும் '' என்றார்கள்.
ஒருவருக்கு வீட்டு வாடகை, மூலதன ஆதாய வரி இப்படி ஏதாவது ஒன்று ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நிச்சயம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அரசு இந்த புதிய உத்தரவை இன்னும் எளிமைப்படுத்தி னால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- சி.சரவணன்

Source - Vikatan Magazine