Pages

Monday, August 22, 2011

முதற்படி முதலில் படி! - 38

முதற்படி முதலில் படி!


கடந்த பல வாரங்களாக பங்குச் சந்தை குறித்த அடிப்படை விஷயங்களை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நீண்டகால முதலீட்டை லாபகரமாகச் செய்ய நான் சொல்லி இருக்கும் விஷயங்களே போதுமானவை. சந்தையில் நிகழும் மாற்றங்களை செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் அறிந்து உங்கள் அறிவை தொடர்ந்து பெருக்கிக் கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் பாதுகாப்பான முறையில் கணிசமான லாபத்தைச் சம்பாதிக்க வாழ்த்துக்கள்! பங்குச் சந்தை தொடர்பான ஆரம்பப் பாடங்கள் முடிந்து விட்ட நிலையில், இனி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்கலாம் என கடந்த இரண்டு இதழ்களில் அறிவித்ததைத் தொடர்ந்து, பல ஆயிரம் வாசகர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றுக்கு இங்கே பதில் சொல்கிறேன்.
இளங்கோ கண்ணன், மதுரை.
என் மகன் இப்போது 9-ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தி, அடிப்படையான விஷயங்களைக் கற்றுத் தரலாமா?
''தாராளமாக! இன்னும் சிறு வயதில்கூட அறிமுகப் படுத்தலாம். ஆனால், ஒரு நீண்டகால முதலீட்டாளராக அறிமுகப்படுத்துங்கள்; தினசரி டிரேடராக/ ஸ்பெக்கு லேட்டராக பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தாதீர்கள்! பங்குச் சந்தையை ஒரு விளையாட்டாக விளையாடி குழந்தைகளுக்கு கற்றுத் தர விரும்புகிறவர்கள் http://www.neopets.com/ என்கிற இணையதளத்திற்குள் சென்று ஸ்டாக் மார்க்கெட் என்று தேடினால் உங்களுக்கு அற்புதமான ஒரு விளையாட்டு கிடைக்கும். இதில் உலக நிதிச் சந்தையைப் பற்றிய அறிவையும், அது எவ்வளவு இன்றியமையாதது என்பதையும், அதில் அவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றியும் கற்றுத்தரும்.''
எஸ்.விவேகானந்தன், கரூர்.

நான் வங்கித் துறை, மருத்துவத் துறை பங்குகளில் மட்டுமே முதலீடு செய்து வருகிறேன். இந்த என் அணுகுமுறை சரியா?
''ஒரு சாதாரண முதலீட் டாளர் பல துறைகளைச் சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வதே சரியான முடிவாகும். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, துறைகளின் வளர்ச்சியில் சுழற்சி இருக்கும். உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இன்ஃப்ரா துறை அடிபட்டு இருக்கிறது. அதே சமயத்தில் எஃப்.எம்.சி.ஜி., பார்மா மற்றும் வங்கித் துறைகள் நன்றாக வளர்ந்துள்ளன. அடுத்த சுழற்சியில் இது மாறலாம். எனவே, அதை அறிந்து முதலீடு செய்யவும். நீங்கள் இந்த இரு துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய விரும்பினால், அத்துறை எப்போதெல்லாம் அடிபடுகிறதோ, அப்போது மட்டுமே வாங்கவும். மேலும், இந்த இரு துறைகளில் மட்டுமே முதலீடு செய்யும்போது அவற்றைப் பற்றிய பரிச்சயம் உங்களுக்கு அதிகமாக இருப்பதும் அவசியம்!''
எல்.மாசிலாமணி, திருச்சி-5
நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பங்குச் சந்தை ஓய்வு பெற்றவர்களுக் கானதல்ல என்கிறார்கள். ஆனால், என் நண்பர்கள் பலரும் பங்குச் சந்தையில் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள். எனக்கு ஆசையாக இருக்கிறது. நானும் முதலீடு செய்யவா?
''பங்குச் சந்தை முதலீடு பலருக்கும் பல வகைகளில் உதவுகிறது. சில ஓய்வு பெற்றவர்கள் தங்களின் நேரத்தைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நீங்கள் வசதியானவர் (உங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மேல் உங்களிடம் பணம் இருக்கும் பட்சத்தில்) என்றால், பங்குச் சந்தையினால் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்காது என்றால் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். உங்கள் அன்றாட தேவைகளுக்கான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். டே டிரேடிங் கிலும் ஈடுபடாதீர்கள்.''
எம்.அர்ஜுன், சென்னை.
நான் லாங் டைம் இன்வெஸ்டர். '2,500 ரூபாய் கட்டினால் டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்லித் தருகிறோம்... நிறைய லாபம் பார்க்க முடியும்’ என்று எனக்கு அடிக்கடி அழைப்பு விடுக்கிறது ஒரு நிறுவனம். இத்தகைய வகுப்புகளுக்கு போவது நல்லதா?
''எத்துறையிலும் அறிவைப் பெருக்கிக் கொள்வது நல்லதே! உங்களிடம் பணம், விருப்பம் மற்றும் நேரம் இருக்கும்பட்சத்தில் நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். அதனால் நல்ல லாபம் பார்க்கிறீர்களா இல்லையா என்பதுதான் கேள்வி. முதலில் மேக்ரோ மற்றும் மைக்ரோ எக்கனாமியைப் பற்றி கற்றுக் கொள்ளுங்கள். பிறகு நிறுவனங்களின் ஆபரேஷன்ஸ் மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராயக் கற்றுக் கொள்ளுங்கள். மூன்றாவதாக, டெக்னிக்கல் அனாலிசிஸை கற்றுக் கொள்ளுங்கள். வெறும் டெக்னிக்கல் அனாலிசிஸை மட்டுமே வைத்து பணம் சம்பாதிப்பது கடினமே!''
காயத்ரி சிவராமன், அம்பத்தூர்.
பங்குச் சந்தையில் நான் சொல்கிறபடி முதலீடு செய்யுங்கள். 100% வருமானம் நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார் ஒருவர். அவரை நம்பி 2 லட்ச ரூபாய் பணத்தைப் போடலாமா?
''சில இதழ்களுக்கு முன்பு இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டி ருந்தேன். என்னுடைய பதில், ஒரு போதும் செய்யாதீர்கள் என்பதே! 100% லாபம் சம்பாதிப்பது உறுதி என்றால், அந்த லாபத்தை அவரே சம்பாதித்துக் கொண்டு போகலாமே! மற்றவர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதித்துத் தரவேண்டும் என்று அவருக்கு வேண்டுதலா என்ன? சமீபகாலமாக சிலர் இன்னொரு புது டெக்னிக்கையும் பயன்படுத்தி வருகிறார்கள். 100 சதவிகித லாபம் நிச்சயம் என்பதோடு  நிற்காமல், நஷ்டத்தில் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், இதை பத்திரத்தில் எழுதித் தரத் தயார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்த பத்திரத்தை எங்கும் ரிஜிஸ்டர் செய்ய முடியாது. எனவே, நாளைக்கு உங்களுக்கு நஷ்டம் வந்தால் உங்களால் எங்கும் புகார் செய்ய முடியாது. எனவே, ஜாக்கிரதை!''
டி.நவநீத கிருஷ்ணன், காங்கேயம்.
நான் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறேன். டே டிரேடிங்கில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் பார்க்கிறேன். நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக டே டிரேடிங் செய்யலாமா?
''உறுதியாகச் செய்யாதீர்கள்! டே டிரேடிங்கில் தொடர்ந்து சம்பாதித்தவர்கள் உலகில் வெகு சிலரே! அதில் உறுதியாக லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதுநாள் வரை உங்களுக்கு கிடைத்தது தற்செயலான விஷயமாக இருக்கலாம். அதையே சாஸ்வதம் என்று நினைத்து, வேலையை விட்டீர்கள் எனில் மாட்டிக் கொள்வீர்கள்.''
எஸ்.முத்துசாமி, அம்பாசமுத்திரம்.
நான் கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் பங்குச் சந்தை வணிகத்தில் இறங்கினேன். அதுவும் மாதம் மூன்று பங்குகள் என்கிற அடிப்படையில் கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளேன். நீண்ட கால முதலீட்டிற்கு இதே அடிப்படையில், தொடர்ந்து ஒரே நிறுவன பங்குகளை மட்டும் வாங்கினால் சரியான அணுகுமுறையாக இருக்குமா? அல்லது வெவ்வேறு நிறுவன பங்குகளை வாங்கலாமா?
''நிலக்கரி நம் நாட்டிற்கு எப்போதும் தேவையான ஒன்றுதான். அதனால், அந்நிறுவனத்தின் பங்குகள் நீண்ட காலத்தில் நன்றாகச் செயல்படும். இருந்த போதிலும் உங்களது ரிஸ்க்கை குறைத்துக் கொள்வதற்காக, கோல் இந்தியா நிறுவனத்தைப் போன்ற பெரிய பங்குகள் இன்னும் சிலவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் (உதாரணத்துக்கு எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி.) உங்கள் ரிஸ்க் குறைந்து, நீண்டகால நோக்கில் நல்ல பலன் கிடைக்கும்.''
முற்றும்.

Sunday, August 14, 2011

முதற்படி முதலில் படி! - 37

முதற்படி முதலில் படி!



பங்குச் சந்தையில் போர்ட்ஃபோலியோ அமைப்பது என்பது முக்கியமான விஷயம். போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்கிற சேவையை சிலர் தனியாகவே தருகிறார்கள். போர்ட்ஃபோலியோ என்றால் என்னவென்று முதலில் பார்த்து விடுவோம்.
முதலீட்டில், போர்ட்ஃபோலியோ என்பது ஒரே நபரால் சேகரிக்கப்படும் பலவிதமான முதலீட்டு உபகரணங்கள் ஆகும். உதாரணத்திற்கு ஒரே நபர், பங்குகளில் முதலீடு செய்திருப்பார், பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்திருப்பார். இது தவிர, ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, கடன் பத்திரங்கள், டெபாசிட்டுகள் என இன்னும் பலவற்றிலும் முதலீடு செய்திருப்பார். இவை அனைத்தையும் சேர்த்துத்தான் ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ உருவாகிறது.
நம் சாப்பாட்டில் கூட்டு, பொரியல், கறி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், உப்பு, சாதம் எல்லாம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே சாப்பாடு ருசிக்கும். அதுபோல, நம் போர்ட்ஃபோலியோவில் அனைத்து முதலீட்டு உபகரணங்களும் சரியான விகிதத்தில் இருந்தால் மட்டுமே,
நம் முதலீடு பாதுகாப்பானதாக அமையும். இந்த போர்ட்ஃபோலியோவும் வயதிற்கேற்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் நெய், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால், வயதானவர்களும் அதே மாதிரி இனிப்பையும் ஐஸ்கிரீமையும் சாப்பிட முடியுமா? வயதுகேற்ப உணவு வகைகள் மாறுகிற மாதிரி நம் போர்ட்ஃபோலியோவும் அமைய வேண்டும்.
நான் சந்திக்கும் பல முதலீட்டாளர்கள் இன்றைய தினத்தில் ரியல் எஸ்டேட்டில் தங்கள் முழுப் பணத்தையும் போட்டு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு வீட்டுமனையை அல்லது விளைநிலத்தை முதலீடாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அதில் பலர் அடுத்த ஐந்து வருடத்தில் காலேஜில் சேரப் போகும் தனது குழந்தையின் படிப்புச் செலவுக்காக இன்னுமொரு நிலத்தை/பிளாட்டை வாங்கிப் போடலாமா என்று கேட்கிறார்கள்.
இது ஒருபக்கமெனில், மற்றொரு பக்கத்தில் வருடா வருடம் கட்ட வேண்டிய இன்ஷூரன்ஸ் தொகையை குழந்தையின் பள்ளிக்கூட கட்டணத்தை சேகரிப்பதற்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வருட எஸ்.ஐ.பி. போட்டு, அதை எடுத்து இன்ஷூரன்ஸ் தொகையை/பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டிவிடலாமா என்று யோசனை கேட்கிறவர்களும் உண்டு.
இன்னுமொரு வகையினர் 30 - 40 வயதுக்குட்பட்டவர்கள். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி போன்ற முதலீடு அனைத்துமே வீண். எதில் முதலீடு செய்தாலும் ரிஸ்க் - எனது பணம் எல்லாம் வீணாகிப் போய்விடும். ஆகவே, நான் எனது எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் அஞ்சலகத்தின் மூலமே சேமிக்கிறேன் என்று சொல்கிறவர்களும் உண்டு.

சொல்லப் போனால், மேற்கண்ட ஒவ்வொரு வகையினரும் மிகச் சரியானது என்று நினைத்துக் கொண்டு தவறான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முழுச் சாப்பாட்டில் நாம் எவ்வாறு அயிட்டங்கள் கணகச்சிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அது போலத்தான் நமது போர்ட்ஃபோலியோவும் இருக்க வேண்டும். உங்களது தேவைகளுக்கு ஏற்ப உங்களின் முதலீடு அமைய வேண்டும்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம், வீடு, ஓய்வுகால வாழ்க்கை, தருமம் போன்றவற்றிற்காக சேமிப்பதை முறையாக ஒரு போர்ட்ஃபோலியோ வரையறைக்குள் சேமியுங்கள்/முதலீடு செய்யுங்கள். அதுபோல உங்களின் செல்வம் வளர வேண்டும் என்றாலும் ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.
உங்களது அன்றாடத் தேவைகளை மூன்று காலகட்டத் திற்குள் அடக்கலாம். அவை முறையே குறுகிய காலத் தேவைகள், நடுத்தர காலத் தேவைகள் மற்றும் நீண்ட காலத் தேவைகள். தேவைக்கு ஏற்றாற் போல் உங்களின் முதலீடுகளும் அமைய வேண்டும்.
தேவைகள்
முதலீட்டு வகை (தேவை மற்றும் கால அளவைப் பொறுத்து கீழ்க்கண்ட முதலீடுகளை மேற்கொள்ளலாம்)
குறுகிய காலத் தேவைகள் (மூன்று வருடத்திற்குள்)
சேவிங்ஸ் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட்.
நடுத்தர காலத் தேவைகள் (4 - 7 வருடங்கள்)
எம்.ஐ.பி., பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுஃபண்டுகள், இ.டி.எஃப், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள். தங்கம்/வெள்ளி.
நீண்ட காலத் தேவைகள் (ஏழு வருடங்களுக்கு மேல்)
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்/பங்குகள், இ.டி.எஃப்., ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, சொந்தத் தொழில் அல்லது தொழில் சார்ந்த முதலீடுகள், ஆர்ட் மற்றும் கலெக்டர்ஸ் அயிட்டங்கள்.
மேலே ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ற முதலீட்டு வகைகளைப் பார்த்தோம்.
கீழே உங்களின் வயதிற்கேற்ற முதலீட்டு போர்ட்ஃபோலியோவைப் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத் தினர் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள் நான்கு:
1. பங்கு சார்ந்த முதலீடுகள்.
2. கடன் சார்ந்தமுதலீடுகள்.
3. ரியல் எஸ்டேட்.
4. தங்கம்/வெள்ளி.
மேற்கண்டவாறு உருவாக்கிய உங்களின் போர்ட்ஃபோலியோவை ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்வது நல்லது.
இவ்வாறு ஒரு வரையறைக்குள் முதலீடு செய்யும்போது, நீங்கள் சில லாப வாய்ப்புகளை இழக்க வாய்ப்புண்டு. இதனால் உங்கள் செல்வத்தை இழக்க வாய்ப்பில்லை. முதலீடு என்பது முதலில் பாதுகாப்பைத் தர வேண்டும் - அதற்குமேல் வருமானத்தைத் தர வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உங்கள் முதலீட்டு பயணத்தைத் தொடங்குங்கள்!
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Monday, August 8, 2011

இன்ஷூரன்ஸ் பாலிசி ரேட்டிங்! - பென்ஷன் பிளான் (யூலிப்) - 2

முதற்படி முதலில் படி! - 36

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

எஃப் அண்ட் ஓ. முதல் என்.சி.டி. வரை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பல்வேறு விஷயங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை கட்டுப்பாடுகளைக் (ரெகுலேஷன்) குறித்துப் பார்ப்போம்.  
லக அளவில் மிகச் சிறந்த கட்டுப்பாட் டோடு செயல் படும் பங்குச் சந்தைகளில் நம் இந்திய பங்குச் சந்தையும் ஒன்று. இன்றைய தேதியில் பங்குகளை வாங்கி, விற்பதில் வெளிப்படையான (டிரான்ஸ் பரன்ட்) தன்மை நிலவுகிறது. பங்கு வாங்கி/விற்ற அன்றே எஸ்.எம்.எஸ்., கான்ட்ராக்ட் நோட் என அனைத்தும் வந்து விடும். பங்குகளை வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ நீங்கள் பணம் கொடுத்துவிட வேண்டும். விற்ற இரண்டாவது நாள், உங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துவிட வேண்டும். உங்கள் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளும் வசதி, குறிப்பிட்ட உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆட்டோமெட்டிக்காக டிவிடெண்ட் மற்றும் பேஅவுட் பெறும் வசதி, நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை நேரடியாக (புரோக்கர் வெப்சைட் தவிர) என்.எஸ்.டி.எல்/ சி.டி.எஸ்.எல்.
வெப்சைட் மூலமாகப் பார்த்துக் கொள்ள வசதி என பல விஷயங்கள் வந்துவிட்டன.
இவ்வளவு வெளிப்படைத் தன்மை இருந்தும், பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இன்றும் பல முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பங்கு களை வாங்கும் போதும், விற்கும்போதும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை முதலில் சொல்லிவிடுகிறேன்.
1. உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் டிரேடிங் செய்த போதெல்லாம் உங்களுக்கு தகவல் வரும். மேலும், உங்கள் டீமேட் கணக்கில் இருந்து பங்குகள் உங்களுக்குத் தெரியாமலே விற்கப்பட்டாலும் உங்களுக்குத் தகவல் வந்துவிடும்.
2. இ-மெயில் மற்றும் இன்டர்நெட் வசதி இன்று பங்கு முதலீட்டிற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆகவே, இ-மெயில் அக்கவுன்ட் இல்லையெனில், ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வர்த்தகம் செய்யும் போதெல்லாம், உங்களுக்கு கன்பஃர்மேஷன் மெயில் மற்றும் கான்ட்ராக்ட் வந்துவிடும்.
3. புரோக்கரிடம் உள்ள உங்கள் லெட்ஜர் அக்கவுன்டில் பணத்தை விட்டு வைக்காதீர்கள். நீங்கள் விற்க, விற்க ஆட்டோமெட்டிக்காக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொல்லுங்கள். அதுபோலவே, பங்குகளை வாங்கிய அளவிற்குப் பணத்தை சரியாகக் கொடுத்துவிடுங்கள்.

4. பவர் ஆஃப் அட்டார்னி புரோக்கரிடம் கொடுக்காமல், நீங்கள் ஒவ்வொரு தடவையும் செக் (காசோலை) போல டீமேட் ஸ்லிப் எழுதிக் கொடுக்கலாம்.  நீங்கள் ஆக்டிவ் வான முதலீட்டாளர் இல்லை எனில், இம்முறை உங்களுக்கு சரிப்பட்டு வராது.
5. டிரேடிங் அக்கவுன்டை ஒரு இடத்திலும், டீமேட் அக்கவுன்டை வேறொரு இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதிலும் அசௌகரியங்கள் அதிகம்.
6. நீங்கள் பங்குச் சந்தை பற்றி முற்றிலும் அறிந்தவர் எனில், எங்கு வேண்டுமானாலும் உங்கள் அக்கவுன்டை இன்டர்நெட் மூலம் திறந்து அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள். பங்குச் சந்தை பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர் எனில், ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை திறந்து கொள்வது நல்லது.
7. எந்த ஒரு முதலீட்டிற்கும் கண்காணிப்பு என்பது அவசியம். அதை மனதில் கொண்டு, அவ்வப்போது உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை கண்காணித்துக் கொள்ளுங்கள்.
8. எவரேனும் உங்களை அணுகி நீங்கள் லட்ச ரூபாய் முதலீடு செய்யுங்கள். நான் மாதத்திற்கு 5% அல்லது 10% பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்துத் தருகிறேன் என்று கூறினால், நம்பாதீர்கள்! அப்படி நம்பினீர்கள் எனில் நீங்கள் ஏமாறுவது உறுதி!
9. எக்காரணம் கொண்டும் புரோக்கிங் நிறுவனத்தில் வேலை செய்யும் டீலர்களிடம் உங்களது அக்கவுன்டை அவரே ஆப்ரேட் செய்து, சம்பாதித்துத் தருமாறு கூறாதீர்கள்.
10. குறைந்தது ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், நீங்கள் முதலீடு செய்த பணம் எவ்வளவு, விற்றது எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்ற கணக்கைப் பாருங்கள். 
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் பின்பற்றிய பின்பும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்  என்றால், என்ன செய்யலாம் என்பது பற்றி கீழே பார்ப்போம்.
நீங்கள் சொல்லாமலே, உங்கள் புரோக்கர் ஒரு பங்கை வாங்கி/விற்றுவிட்டார் எனில்,  ஒவ்வொரு புரோக்கரிடமும் கம்ப்ளையன்ஸ் ஆபீஃஸர் என்று ஒருவர் இருப்பார். அவருக்கும், பிராஞ்ச் மேனேஜருக்கும் உங்கள் புகாரை உடனடியாக இ-மெயிலில் அனுப்புங்கள். மேலும், உங்கள் புகாரை கடிதம் எழுதி புரோக்கரிடம் கொடுங்கள். அக்கடிதம் கொடுத்ததற்கான அத்தாட்சியையும் பெற்றுக் கொள்ளுங்கள். இதன்மூலம், உரிய தருணத்தில் நீங்கள் புகார் சொல்லவில்லை என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வருவதைத் தடுக்க முடியும். அந்த புகாருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், மேற்கொண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்குப் புகாரை அனுப்பலாம்.
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) தனது இணைய  தளத்தில் புகார் செய்வது பற்றிய விவரங்களை தெளிவாகத் தந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். தபால்/கூரியர் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். அதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தி லேயே உள்ளன.
தவிர, தேசிய பங்குச் சந்தை சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் முதலீட்டாளர் சேவை மையங்களை அமைத்துள்ளது. அம்மையங்களை தொடர்பு கொண்டு உங்களது பிரச்னை களுக்குத் தீர்வு காணலாம். அதுபோல, மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) அதன் புரோக்கர்கள் மீது  புகார் செய்வதற்கு வசதி செய்து தந்திருக்கிறது. விவரங்கள் அதன் இணையதளத்தில் உள்ளது.
பங்குச் சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள பங்கு நிறுவனங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தாலும், பங்குச் சந்தை புகார் மையத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். பொதுவாக பெரிய, தரமான நிறுவனப் பங்குகளை வாங்கும்போது இது மாதிரியானப் பிரச்னைக்கு இடம் இல்லை.
நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் புரோக்கரிடம் அல்லது பங்குச் சந்தையிடம் புகார் செய்யும்போது, செபிக்கும் ஒரு நகல் அனுப்புவது நல்லது. செபி-யின் இணையதளத்தில் புரோக்கர் குறித்த புகார்களை ஏற்றுக் கொண்டு சரி செய்ய ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனி செல்கள் நியமிக்கப் பட்டுள்ளன. நமது தென் பிராந்தியத்திற்கான செபி அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ளது.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Monday, August 1, 2011

மந்த்லி இன்கம் பிளான்: அதிக வருமானம், குறைந்த வரி!

மந்த்லி இன்கம் பிளான்: அதிக வருமானம், குறைந்த வரி!


வங்கிகளில் நாம் போட்டு வைத்திருக்கிற ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு  ஒவ்வொரு மாதமும் வட்டி வருகிற மாதிரி, மியூச்சுவல் ஃபண்டில் போடும் பணத்திற்கும் மாதா மாதம் வருமானம் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி நினைக்கிறவர்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதுதான் 'மன்த்லி இன்கம் பிளான்’. மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் பல்வேறு வகைகளில் இந்த மன்த்லி இன்கம் ஃபண்டும் ஒன்று.
எல்லா மாதமும் கிடைக்குமா?
பெயரிலேயே 'மன்த்லி இன்கம்’ என்று இருப்பதால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. பல மாதங்களில் கொடுப்பார்கள்; சில மாதங்களில் கொடுக்காமல்கூட இருக்கலாம். ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தே டிவிடெண்ட் தரப்படும். சந்தை இறங்கும் சமயத்தில் வருமானம் இல்லாமல் போகும் என்பதால், அந்த மாதத்தில் டிவிடெண்ட் கொடுக்க மாட்டார்கள்.
ஆப்ஷன்கள்!
இந்த ஃபண்டுகளில் மாதாந்திர டிவிடெண்ட், காலாண்டு டிவிடெண்ட் போன்ற ஆப்ஷன்கள் இருக்கிறது. நமக்கு தேவையான ஆப்ஷனை தேர்வுசெய்து கொள்ளலாம். டிவிடெண்ட் வேண்டாம் என்கிறவர்கள் குரோத் ஆப்ஷனை தேர்வு செய்து, பிற்பாடு மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை, பெரும்பாலும் கடன் சார்ந்த திட்டங்களிலேயே முதலீடு செய்யப்படுகிறது. மிகக் குறைந்த அளவு தொகை மட்டுமே ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, சுமார் 25 சதவிகித அளவுக்கு மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
வருமானம் எப்படி?
சுமார் 75% கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், இந்த ஃபண்டுகளில் வருமானம் ஓரளவுக்கு நிலையானதாகவே இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகள், கடந்த ஐந்தாண்டுகளில் 10 சதவிகித வருமானம் தந்திருக்கிறது. சில ஃபண்டுகள் கடந்த மூன்றாண்டுகளில் 14 சதவிகித ஆண்டு வருமானமும் கொடுத்திருக்கின்றன.

யாருக்கு ஏற்றது?
* வங்கி வட்டியைவிட கொஞ்சம் அதிக வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு...
* ஓரளவுக்கு மட்டுமே ரிஸ்க் எடுக்க முடியும் என்று நினைக்கிறவர்களுக்கு...
* சீனியர் சிட்டிசன்களுக்கு!
இந்த ஃபண்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டிற்கு வரி (டிவிடெண்ட் விநியோக வரி) இருக்கிறது. ஆனால், இந்த வரியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டிவிடும் என்பதால், முதலீட்டாளர்கள் தனியாக வரி எதுவும் கட்டத் தேவையில்லை.
குறுகியகால மூலதன ஆதாய வரி!

அதிக அளவு தொகையை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு என்ன வரி விகிதமோ, அதையே இங்கும் செலுத்த வேண்டி இருக்கும்.
ஒரு வருட காலத்திற்குள் விற்கும்போது லாபத்திற்கு இந்த வரியைச் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களது வருமான வரி எல்லைக்கு ஏற்ப இந்த வரியை செலுத்த வேண்டி இருக்கும். அதனால் அதிக வரி வரம்பிற்குள் இருப்பவர்கள், ஒரு வருட காலத்தில் எம்.ஐ.பி.யில் இருந்து வெளியேறுவது பயன் தருவதாக இருக்காது.
நீண்டகால மூலதன ஆதாய வரி!
ஒரு வருடத்துக்குப் பிறகு விற்கும்போது, லாபத்தில் 10 சதவிகித வரி அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, 20 சதவிகித வரி உண்டு. இதில் எது குறைவோ அதை வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
ஃபிக்ஸட் டெபாசிட்டை
விட அதிக வருமானம்; வருமான வரியும் குறைவு என்பது இந்த ஃபண்டின் கவர்ச்சிகரமான விஷயம்.  தங்கள் போர்ட் ஃபோலியோவில் கடன் சார்ந்த முதலீடு வேண்டும் என்பவர்கள் இந்த ஃபண்டை தாராளமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்.
- வா.கார்த்திகேயன்.


Source - Vikatan Magazine

வருமான வரி சேமிப்பில் புலிகளாகும் புள்ளிமான்கள்!

வருமான வரி சேமிப்பில் புலிகளாகும் புள்ளிமான்கள்!

சேமிப்பதிலும் சரி, செலவு செய்வதிலும் சரி, நம்மூர் பெண்கள் கில்லாடிகள்தான்! இப்போது வருமான வரி விஷயத்திலும் வெளுத்துக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் வரிச் சேமிப்புக்கான வழிகளை சரியாக இனம்கண்டு அதைப் பயன்படுத்துவதிலும் புலிகளாகிவிட்டார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் 'டாக்ஸ் ஸ்பேனர்’ எனும் நிறுவனம் சுமார் 500 இந்திய நிறுவனங்களில் ஓர் ஆய்வை மேற்கொண்டபோது, வரி விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் மிகத் தெளிவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்களின் வரி விகிதம் (சம்பளத்தில், செலுத்தும் வரியின் விகிதம்) சராசரியாக 4 சதவிகிதமாக உள்ளது.
அதே சமயத்தில் ஆண்களின் வரி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கிறது. நாடு முழுவதும் இருக்கும் இந்த நிலவரம் ஒருபக்கம் இருக்க, நம்மூர் பெண்கள் எப்படி இருக் கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஒரு சோறு பதமாக மூன்று பெண்களைச் சந்தித்தோம்... உண்மையிலேயே அசர வைத்துவிட்டார்கள்!
டைட்டன் ஷோரூம் பிரான்ச்சைஸி உரிமையாளர்:
''வருமான வரி விஷயத்துல நான் எப்பவும் கவனமா இருப்பேன். சொந்தமா வீடு கட்ட முடிவு செஞ்சப்ப, அதுக்குத் தேவையான பணம் இருந்தாலும், வரிச் சலுகைக்காக வீட்டுக் கடன் வாங்கினேன். கையில இருந்த பணத்தை வச்சுகிட்டு பிஸினஸை விரிவுபடுத்தினேன்.
வீட்டுக் கடன் தவிர, அரசு கடன் பத்திரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மியூச்சுவல் ஃபண்டுகள்னு வரிச் சலுகைக்கான முதலீடுகளாகப் பார்த்து பணத்தைப் போட்டிருக்கிறேன்!''
உஷா நாராயணன், தனியார் நிறுவன ஊழியர்:
''எனது கணவர் இருந்த வரை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்தான் பார்த்துக் கொள்வார். ஆனால், அவர் மறைந்த பிறகு நானே வரி சேமிப்பை திட்டமிடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கான வரிச் சலுகை என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற் போல் பிளான் செய்து முதலீடு செய்கிறேன். பி.பி.எஃப்., இன்ஃப்ரா பாண்டு பத்திரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மெடிக்ளைம், இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு அப்படின்னு ஏறக்குறைய வரி கட்டத் தேவையில்லாத அளவுக்கு நடந்துகொள்கிறேன். நான் வரிச் சலுகை இல்லாத ஒன்றில் முதலீடு செய்கிறேன், அது தங்கத்தில் மட்டும்தான்!''
அனுராதா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்:
''வரி சேமிப்பு விஷயத்தில் முன்பு எனக்கு ஆர்வமில்லை. ஆனால், இப்ப பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே, டி.வி. முன்னால் உட்கார்ந்து என்னென்ன வரிச் சலுகைகள் அறிவிக்கிறார்கள் என பார்த்து குறித்து வைத்துக் கொள்வேன். அதற்குத் தகுந்தாற்போல் நிதி ஆண்டின் தொடக்கத்திலே எவ்வளவு வருமானம் வரும் என கணக்கிட்டு, அதற்கேற்ப முதலீடு செய்வேன். இப்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு, வரிச் சேமிப்பு திட்டங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அந்த திட்டங்களும் நல்ல லாபம் கொடுப்பதாக இருக்கிறதா என்று பார்ப்பேன். வரி சேமிப்பிற்காக நஷ்டப்பட முடியாதில்லையா?''
இனியாவது, வரிக் கணக்கை பெண்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாமே!
-பானுமதி அருணாசலம்
படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

சித்ரா சிவக்குமார்,

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 35

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

பங்குச் சந்தையில் பங்குகள் மட்டும்தான் வர்த்தகமாகிறதா என்றால் இல்லை. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் பங்குகள் மட்டுமே வர்த்தகமாகியிருக்கலாம். ஆனால், இன்றோ பல்வேறு விஷயங்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?  
1. பங்குகள், 2. இ.டி.எஃப்., 3. எஃப் அண்ட் ஓ., 4. கரன்ஸி, 5. என்.சி.டி., 6. வாரண்ட், 7. ஐ.டி.ஆர்., 8. கடன் பத்திரங்கள், 9. மியூச்சுவல் ஃபண்டுகள்.
பங்குகளைப் பற்றி கடந்த பல இதழ்களாகப் பார்த்தோம். இ.டி.எஃப்-ஐயும் கடந்த இதழில் பார்த்தோம். மற்றவற்றைப் பற்றி சுருக்கமாக இந்த இதழில் பார்ப்போம்.
எஃப் அண்ட் ஓ (Futures & Options). இவை இரண்டும் சேர்த்து பொதுவாக 'டெரிவேட்டிவ்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் ஆகிய இரண்டும் ஒருவிதமான ஃபைனான்ஷியல் கான்ட்ராக்ட் ஆகும். நீங்கள் பங்குகளை விலைக்கு வாங் கினால், அவற்றை வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். ஆனால்,
எஃப் அண்ட் ஓ-வில் பங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்களை நாம் விலைக்கு வாங்குகிறோம். அதாவது, ஃபியூச்சர்ஸில் - எதிர்காலத்தில் வாங்கப் போகும்/விற்கப் போகும் ஒன்றிற்கு இன்றே விலையை நிர்ணயித்துக் கொள்வதே ஃபியூச்சர்.
ஆப்ஷன்ஸ் சற்று மாறுபட்டது. ஒரு பங்கை குறிப்பிட்ட விலைக்கு வாங்குகிறேன்/விற்கிறேன் என்கிற ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சிறுதொகையை அட்வான்ஸாகக் கட்டி விடுவது. இதில் என்ன வசதி என்றால், நாம் ஒப்பந்தம் செய்து கொண்ட விலை நமக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே நாம் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அட்வான்ஸாகக் கட்டிய சிறிய தொகையை, போய்த் தொலை கிறது என்று அப்படியே விட்டுவிடலாம். இதில் கால் ஆஃப்ஷன், புட் ஆஃப்ஷன் என இரண்டு வகை உண்டு.
இந்த எஃப் அண்ட் ஓ சிலருக்கு சில வகைகளில் உதவிகரமாக இருக்கும். நீண்டநாள் முதலீட்டாளர் தங்கள் லாபத்தைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி இந்த எஃப் அண்ட் ஓ. ஆனால், சிறு முதலீட்டாளர் கள் பணத்திற்கு ஆசைப்பட்டு விஷயம் தெரியாமல் இதில் இறங்கினால் கையை சுட்டுக் கொள்ள நேரிடலாம்!
கரன்ஸி: கரன்ஸி டெரிவேட்டிவ்களும் இந்திய பங்குச் சந்தைகளில் சமீப காலமாக அறிமுகப்படுத்தப் பட்டு வர்த்தகமாகி வருகிறது. இதுவும் ஒரு ஹை ரிஸ்க்கான விஷயம்தான். விஷயம் தெரியாத முதலீட்டாளர்கள் வெறும் யூகத்தை அல்லது அதிர்ஷ்டத்தை நம்பி இறங்கினால், ஆபத்தே வரும். ஆகவே, சிறு முதலீட்டாளர்கள் இதுபோன்ற டெரிவேட்டிவ் வர்த்தகத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், நீங்கள் ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், உங்களுடைய அல்லது உங்கள் நிறுவனத்தின் வருமானத்தைப் பாதுகாத்துக் கொள்ள, கரன்ஸி டெரிவேட்டிவ் மூலம் உங்கள் லாபத்தை அல்லது நஷ்டத்தை ஈடு செய்யலாம்.
என்.சி.டி. (NCD - Non Convertible Debentures): சமீப காலமாக மிகவும் பாப்புலராகி வருகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள உபகரணமாகும். என்.சி.டி. என்பது கடன் சார்ந்த திட்டமாகும். தற்போது வெளிவரும் திட்டங்கள் பலவும் செக்யூர்ட் என்.சி.டி-கள் (Secured NCD) ஆகும். இந்த செக்யூர்ட் என்.சி.டி-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை முதலீட்டாளர்களிடம் அடமானமாக வைத்து நிதி திரட்டுவதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு உத்தரவாதம் அதிகம். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் நிரந்தர வைப்பு நிதிகள் (Fixed Deposits) மூலம் நிதி திரட்டுகின்றன. அந்த வைப்பு நிதிகள் அன்செக்யூர்ட் என்.சி.டி.கள் (Unsecured) ஆகும்.

பொதுவாகத் தற்சமயம் வெளிவரும் டிபஞ்சர்கள் ரூ.1,000 முகமதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும் குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும். இந்த என்.சி.டி-கள் வெளியீடு முடிந்தவுடன், பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகமாகின்றன. ஒவ்வொரு நாளும் அதன் விலை, அன்றைய வட்டி விகிதம், முதிர்வு தேதி, வெளியிட்ட நிறுவனத்தின் அன்றைய நிதி நிலைமை போன்ற பலவற்றின் அடிப்படையில், சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குகளை வாங்கி விற்பது போல் இந்த என்.சி.டி-களையும் வாங்கி விற்கலாம். டீமேட் கணக்கில் இந்த என்.சி.டி.கள் இருப்பதால், மூலத்தில் வருமான வரி பிடிப்பு ஏதும் இல்லை என்பது இதிலுள்ள கூடுதல் அட்ராக்ஷன்.
என்.சி.டி-களை வாங்கி, முதிர்வு வரை வைத்திருப்ப வர்களுக்கு சந்தை ரிஸ்க் ஏதும் இல்லை. அதே சமயத்தில், தங்களது தேவைகளுக் காக, முதிர்வு தேதிக்கு முன்பு சந்தையில் விற்கச் செல்லும் போது அன்றைய வட்டி விகிதத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற - இறக்கம் இருக்கும். இதுபோன்ற உபகரணங்களில் முதலீடு செய்பவர்கள் அதிகமாக சந்தையில் விற்க வரமாட் டார்கள். எனவே, சந்தையில் வர்த்தகம் ஆகும் அளவு குறைவாக இருக்க வாய்ப்புண்டு. இதனால் லிக்விட்டி ரிஸ்க் ஏற்பட வாய்ப்புண்டு.
வாரண்ட்ஸ்: உரிம வாரண்டுகளை நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை பங்குகளாக மாற்றப்படும். அந்த காலகட்டத்திற்குப் பிறகு நிறுவனங்கள் அவற்றை பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்கின்றன. அவ்வாறு லிஸ்ட் செய்யப்பட்ட நல்ல தரமான வாரண்டுகளை விவரமறிந்து வாங்கி முதலீட்டாளர்கள் லாபமடையலாம்.
ஐ.டி.ஆர் (IDR – Indian Depository Receipt): இந்திய நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஏ.டி.ஆர்-ஆக (ADR – American Depository Receipt) அமெரிக்க பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்கின்றன.  அதேபோல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை இந்திய பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்வதே ஐ.டி.ஆர். அவ்வாறு சமீபத்தில் லிஸ்ட் செய்யப்பட்டது ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கியின் ஐ.டி.ஆர். வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைக்கிறவர்கள் இந்த ஐ.டி.ஆர். என்ன விதமான வருமானம் கொடுத்திருக்கிறது என்று பார்த்து விட்டு வாங்கலாம்.
கடன் பத்திரங்கள்: அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. இதில் 'ஹோல்சேல் மற்றும் ரீடெய்ல்’ மார்க்கெட் என இரு வகை உள்ளது. நம் நாட்டில் கடன் பத்திரங்களுக்கான மார்க்கெட் இன்னும் அவ்வளவு பிரபலமடையவில்லை. செபி-யும் கடன் பத்திரச் சந்தையை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் நம் கடன் பத்திரச் சந்தை இன்னும் முளைகூட விடவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்: பங்குச் சந்தை மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கலாம், விற்கலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தி ஓரிரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், பல அசௌகரியங்களால் இத்திட்டம் சூடு பிடிக்கவில்லை. பங்குச் சந்தை மூலம் நடைபெறும் மியூச்சுவல் ஃபண்ட் வர்த்தகம் மிக மிகக் குறைSவே! ஆகவே, சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதே சிறந்தது!
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

தங்கம் - தீபாவளிக்குள் பத்து கிராம் 25,000 ரூபாய்!?

தங்கம் - தீபாவளிக்குள் பத்து கிராம் 25,000 ரூபாய்!?

கவர் ஸ்டோரி
''வரும் தீபாவளிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை இருபத்தைந்தாயிரத்தை தொட்டால் ஆச்சரியமில்லை!''
-இப்படி ஒரு தகவல் மார்க்கெட்டில் பரவி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஏழு மாதங்களில் 10 கிராம் தங்கம் 2,486 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் 6,439 ரூபாய் அதிகரித்து, பலரையும் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.  
ந்நிலையில் இப்போது 'இருபத்தைந் தாயிரம்’ என்று தீயைக் கொளுத்திப் போட்டிருக் கிறார்கள்! இந்த தகவல் பற்றி தங்க நகை வியாபாரிகள் சிலரிடம் பேசினோம்...
''இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிய பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் அடுத்தடுத்து வரும். முதலில் ஓணம், பிறகு தீபாவளி, அதன் பிறகு பொங்கல் என வரிசையாக வரும் பண்டிகை நாட்களின்போது தங்கம் வாங்குவது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. தவிர, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுக்கவே நிறைய திருமணங்கள் நடக்கும். நகைநட்டு இல்லாத திருமணங்களா! எனவே, அடுத்த மூன்று மாதங்களில் விலை 25,000 ரூபாயை எட்ட நிறையவே வாய்ப்பிருக்கிறது'' என்றார்கள் அவர்கள். தங்க நகை வியாபாரத்தில் புழங்குகிறவர்கள் இப்படிச் சொன்னாலும், அதை உறுதிப்படுத்திக் கொள்ள கமாடிட்டி நிபுணரும், மும்பையில் இருக்கும் 'காம்டிரெண்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.
''தங்கத்தின் விலை முன்பு மாதிரி ஒரே காரணத்தைக் கொண்டு தீர்மானிக்கப் படுவதாக இல்லை. அன்றைய தினத்தில் உலக அளவில் என்ன நடக்கிறதோ, அதைப் பொறுத்தே  விலையில்  ஏற்றம், இறக்கம் இருக்கிறது. அதனால் இந்த காரணத்திற்காகத்தான் விலை ஏறுகிறது என்று யாராலும் தெளிவாக யூகிக்க முடிவதில்லை.
ஒரு பொருளின் விலை தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் உயராது. ஆனால், தங்கத்தின் விலை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் டெக்னிக்கலாக ஒரு விலை இறக்கம் வரவேண்டும். ஆனால், அந்த இறக்கம் தற்போது வராததற்குக் காரணம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்னைகளே! இந்த நாடுகளில் அரசு பாண்டு பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர் களுக்கு அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு அமெரிக்க அரசிடம் தற்போது பணம் இல்லை. இப்படி ஒரு நிலை அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். புதிதாகப் பணத்தை அச்சடித்து வெளியிட்டால் டாலரின் மதிப்பு குறையும். அப்படி வெளியிடாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் நொடிந்து போகும். அப்படி நொடிந்து போனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும். இதற்குப் பயந்தே பலரும் கையிலிருக்கும் டாலரை விற்று, தங்கத்தை வாங்குகிறார்கள். இதனால்தான் இப்போது தங்கத்தின் விலை ஏறுகிறது.
பொதுவாக, உலகளவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தங்கத்தின் தேவை குறைவாக இருக்கும். இதனால் விலையும் இந்த மாதங்களில் குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில்தான் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது! இப்படி புதுப்புது காரணங்களால் விலை உயர்ந்து, முந்தைய  காலங்களில் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்போதைய சூழ்நிலை யில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு கடன் பிரச்னை சரியாகும் என்றால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த பிரச்னைகள் ஓர் இரவில் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய நிலையில் அமெரிக்க பிரச்னைகூட சரியாகிவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய கடன் பிரச்னை இப்போது தீர வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அமெரிக்க பிரச்னை சரியாகி டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறையுமெனில் தங்கம் விலை குறைய வாய்ப்பி ருக்கிறது. அப்படி குறைந்தால் பத்து கிராம் தங்கத்தின் விலை 21,500 ரூபாய்க்குப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், பொருளாதாரப் பிரச்னை தொடர்ந்து இருந்து, நிலைமை இன்னும் மோசமாகும் பட்சத்தில் விலை அதிகரித்து 24,500 ரூபாய்க்கு மேல் போக வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதம்தானே! பொறுத்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது! கையில் பணம் இருந்தால் வாங்கி வைத்தேகூட பாருங்கள்!
-பானுமதி அருணாசலம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்


Vikatan Magazine

Monday, July 25, 2011

''குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது போதுமா?''

''குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது போதுமா?''

சைல்டு மியூச்சுவல் ஃபண்ட்
குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமிக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. அது மாதிரியான பெற்றோர்களைக் கவர்வதற்காகவே 'குழந்தைகளின் எதிர்காலத்துக்கு’ என்ற பெயரில் பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் உலா வருகின்றன.
இதைப் பார்த்த சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் குழந்தை களின் எதிர்காலத்துக்கு என சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகின்றன. இவற்றின் சாதக, பாதகங்கள் என்ன, இந்த ஃபண்டுகளின் வருமானம் எப்படி, இதில் முதலீடு செய்யலாமா, கூடாதா என்கிற கேள்விகளுக்கான பதிலை இனி பார்ப்போம்.
இந்த வகை ஃபண்டுகளில் மூன்று முதல் பதினெட்டு வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் பெயரில்தான் முதலீடு செய்ய முடியும். இந்த வகை ஃபண்டுகள் சிலவற்றில் 'லாக் இன்’ காலம் இருக்கிறது. இன்னும் சில ஃபண்டுகளில் 'லாக் இன்’ காலம் என்று சொல்லாமல், மூன்று வருடத்துக்கு முன்பு எடுத்தால் வெளியேறும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்கிறது. பொதுவாக, டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஒரு வருடத்துக்குள் பணத்தை வெளியே எடுத்தால், வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், சைல்டு பிளான்களில் மூன்று வருடத்துக்கு (சில ஃபண்டுகளில் ஏழு வருடம்!) முன்பு எடுக்கும் பட்சத்தில் வெளியேறும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் அளித்த வருமானத்தைப் பார்த்தால், அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. கடந்த ஐந்தாண்டு களில் சராசரியாக 10 சதவிகித வருமானத்தையே தந்திருக் கின்றன. இதற்கு காரணம், தற்போது சந்தையில் இருக்கும் சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் பேலன்ஸ்ட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டு களாகவே இருக்கின்றன.
முழுமையான ஈக்விட்டி ஃபண்டுகளே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலத் துக்காகச் சேமிக்கிறோம் என்று சொல்லிவிட்டு முழுமையாகக் கடன் திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பான முதலீட்டு முடிவாக இருக்க முடியாது.
சாதாரண டைவர்சிஃபைட் ஃபண்டுகளைவிட சைல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, குழந்தைகளின் பெயரில் தான் இந்த ஃபண்ட் இருக்கும். இரண்டாவது, மூன்று வருட காலத்துக்கு முன்பு எடுத்தால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இவை தவிர சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை எடுப்பதற்கு வேறு எந்த சிறப்பான காரணமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. எனவே, இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே முடிவெடுப்பது நல்லது என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்து.
அப்படி என்றால் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன மாதிரியான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது என்று நீங்கள் கேட்கலாம். பல வருடங்களாக தொடர்ந்து அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தையில் இருக்கவே செய்கின்றன.
இவற்றில் ஏதாவது ஒரு நல்ல ஃபண்டை தேர்வு செய்து எஸ்.ஐ.பி. முறையில் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யலாம். இடையில் பணத்தை எடுக்காமல், தொடர்ந்து முதலீடு செய்தாலே போதும், உங்களின் முதலீடு விருட்சமாக வளர்ந்துவிடும்.
- வா.கார்த்திகேயன்.

முதற்படி முதலில் படி! - 34 (இ.டி.எஃப்!)

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
இ.டி.எஃப்.!
சில வாரங்களுக்கு முன்பு பேஸிவ் இன்வெஸ்டிங் முறை பற்றி பார்த்தோம். அம்முறையின் ஒரு பகுதிதான் இ.டி.எஃப். என்று சொல்லப்படுகிற 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு’கள். அதுபற்றி இந்த இதழில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான பங்குகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு பங்கையும் ஆராய்ந்து முதலீடு செய்ய நேரமில்லை. எனவே, சந்தையையே விலைக்கு வாங்கிவிட்டால் என்ன என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இ.டி.எஃப்!
'கோல்டு இ.டி.எஃப்...’ இப்போது நம்மூரில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதுதான் 'கோல்டு இ.டி.எஃப்.’ இதுவே ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல் பட்டால்? அதாவது, 'பேங்க் இண்டெக்ஸ்’ என்கிற குறியீட்டை எடுத்துக் கொள்வோம். இந்த இண்டெக்ஸில் உள்ள சில பங்குகளை மட்டும் ஒரு குரூப்பாக்கி, அதில் முதலீடு செய்தால் அதுதான் இ.டிஎஃப். பேங்க் இண்டெக்ஸில் உள்ள வங்கிகள் நன்றாக செயல்பட்டால், அதனால் அந்த இண்டெக்ஸ் உயர்ந்து நமக்கு லாபம் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட குறியீட்டின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, இ.டி.எஃபின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இது எக்ஸ்சேஞ்சில் டிரேட் ஆகும் என்றாலும், இதை நிர்வாகம் செய்வது மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள்தான்.
உலக அளவில் இ.டி.எஃப்- களின் வரலாறு மிகக் குறுகியது. கடந்த 20 வருடங்களாகத்தான் இ.டி.எஃப்-கள் நடைமுறையில் உள்ளன. இருந்தபோதிலும் வளர்ந்த நாடுகளில் இம்முறை முதலீடு மிகவும் பிரசித்தம்.
இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகள் கிடைக்கும்.
1. பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவது/ விற்பது போல, இ.டி.எஃபையும் எளிதில் வாங்கலாம்; விற்கலாம் - அதுவும் மிகக் குறைந்த கமிஷனில். தவிர, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதை நிர்வாகம் செய்ய எடுத்துக் கொள்ளும் தொகையும் மிக மிகக் குறைவு (low expense ratio).
2. சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நம் லாப நஷ்டமும் இருக்கும்.
  3. மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளில் எப்போது முதலீடு செய்தாலும், அன்றைய முடிவில் தரப்படும் என்.ஏ.வி. தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இ.டி.எஃப்.பில் முதலீடு செய்யும்போது பங்குகளைப் போல ஒரே நாளில் பல விலைகளில் வாங்க/விற்க முடியும்.
4. அலுத்துக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு (passive investment) செய்ய விரும்புபவர்களுக்கு இ.டி.எஃப்.கள் பெஸ்ட் சாய்ஸ். இத்தகைய முதலீடுகளை 'கவலை இல்லாத முதலீடு’ (in-vestment minus worries) என்றும் கூறலாம்.
5. இந்தியா அடுத்த 20/30 வருடங்களுக்கு உலக அளவில் ஒரு தலை சிறந்த பொருளாதாரமாக விளங்கி முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும். அவ்வாறு வளரும் தருணத்தில் இந்திய பங்குச் சந்தையும் அதன் குறியீடுகளும் நன்றாக வளரும். அந்த வளர்ச்சியை இ.டி.எஃப்.களில் நேரடியாகக் காணலாம்.
6. மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீட்டாளர் களும், குறுகிய கால முதலீட்டாளர் களும் அடிக்கடி உள்ளே வந்து செல்வதால் ஏற்றயிறக்கம் இருக்கும். இ.டி.எஃப்.பில் அந்தப் பிரச்னை இல்லை.
7. பங்கு சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு வருமான வரி, பங்குகளைப் போலவே பாவிக்கப்படும். கடன் சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு, கடன் திட்டங்களைப் போல பாவிக்கப்படும்.
இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பலவிதமான இ.டி.எஃப்.கள் நம் நாட்டில் உள்ளன. பங்கு சார்ந்தவை, கடன் சார்ந்தவை, துறை சார்ந்தவை, கமாடிட்டி சார்ந்தவை (தங்கம்) என பல வகைகளில் கிடைக்கிறது.
எவ்வகையான முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யலாம்?
இ.டி.எஃப். எதை அடிப்படையாகக் கொண்டு உள்ளதோ (உதாரணத்திற்கு நிஃப்டி 50 பங்கு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள இ.டி.எஃப்) அந்த பொருள் ஏறுமளவுக்கு, எனக்கு கிடைக்கும் வருமானம் இருந்தால் போதுமானது - கூடவோ, குறையவோ வேண்டாம் என்று நினைப்பவர்கள், அலுத்துக் கொள்ளாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சந்தையில் உடனே நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்கள், சந்தையின்/ குறியீட்டின் ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி வருமானம் செய்ய நினைப்பவர்கள், ஹெட்ஜ் செய்ய விரும்புபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
டே டிரேடிங் அல்லது மிகக் குறுகிய காலத்திற்காக வர்த்தகம் செய்பவர்கள், இ.டி.எஃப்-ஐ உலகெங்கிலும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
இந்தியாவில் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
இந்தியாவில் இ.டி.எஃப்.கள் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. எனவே, சில இ.டி.எஃப்.கள் வர்த்தகமாகும் அளவு (volume) குறைவாக உள்ளது. முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களை முதலீடு செய்ய தேர்வு செய்யும்போது, தினசரி வர்த்தகமாகும் அளவை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மேலும், அத்திட்டத்தை நிர்வாகம் செய்ய வசூலிக்கப்படும் தொகை, அதை நிர்வகிக்கும் நிறுவனம், அத்திட்டத்தின் செயல்பாடு, எந்தக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அக்குறி யீட்டை தொடர்ச்சியாக மிகச் சரியாக பிரதிபலிக்கிறதா என்பனவற்றையும் கவனிப்பது அவசியம்.
நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் எழும். 'இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டு’களுக்கும் இ.டி.எஃப்-களுக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் அது. இரண்டுமே குறியீட்டை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றாலும், நிர்வகிக்கப்படும் விதம், வர்த்தகம் செய்யப்படும் விதம், ஃபண்டு செலவு சதவிகிதம், என்.ஏ.வி அறிவிப்பு போன்ற அனைத்தும் வித்தியாசப்படும். பல கோணங்களில் இருந்து பார்க்கும்போது, இ.டி.எஃப். இண்டெக்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைவிடச் சிறந்தது என்றே சொல்ல வேண்டும். 'பங்கு சார்ந்த, கடன் சார்ந்த, துறை சார்ந்த மற்றும் தங்கம் சார்ந்த இ.டி.எஃப்.கள் கிடைக்கின்றன. சமீப காலத்தில் பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்டைப் போல இ.டி.எஃப்.களை முதன்மையான தொழிலாகக் கொண்டு மோத்திலால் ஆஸ்வால்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இ.டி.எஃப். திட்டங்கள் தங்கம் சார்ந்தவைதான். கோல்டு இ.டிஎஃப். திட்டங்களில் கோல்டுபீஸ், நிஃப்டி 50-ஐ அடிப்படையாகக் கொண்ட நிஃப்டி பீஸ், வங்கி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பேங்க் பீஸ் போன்ற இ.டி.எஃப்.கள் பிரபலமாக இருக்கின்றன. ஜூனியர் நிஃப்டியை வைத்து ஜூனியர்பீஸ், சி.என்.எக்ஸ். மிட்கேப் குறியீட்டை வைத்து எம்-100-ம் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது. இது தவிர இன்ப்ஃராபீஸ், லிக்விட்பீஸ் போன்றவையும் வர்த்தகமாகிறது. வெளிநாட்டுக் குறியீடுகளை வைத்தும் இந்தியாவில் இப்போது ஹேங்செங்பீஸ் மற்றும் நாஸ்டாக்-100 போன்ற இ.டி.எஃப்.களும் கிடைக்கின்றன.
(படி ஏறுவோம்)

Saturday, July 16, 2011

புத்திசாலிகளின் புதிய பாடம்! - லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

புத்திசாலிகளின் புதிய பாடம்! - லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

டகு... போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படிக்கட்டு என வாழ்க்கையில் போகவே கூடாத இடங்களின் வரிசையில் ஒருகாலத்தில் அடகு வைப்பதுவும் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது; கருத்துகளும் மாறிவிட்டது. ஓர் ஆத்திர அவசரத்துக்கு யாரிடமும் கையேந்தாமல் நம்மிடம் இருக்கும் நகைகளையோ, சொத்துகளையோ அடகு வைத்து நிலைமையைச் சமாளிப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. இப்போது அடுத்தகட்டமாக அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமின்றி, லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.
தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட அடமானக் கடனுக்கு குறைவான வட்டி என்பதால் அதன் மூலம் தங்கள் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலேபோய் தங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு வழியாகவே அடகு வைப்பதை மாற்றியிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் குறைந்த வட்டியில் அடகு வைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க முடியும். அல்லது அதிக வட்டி கட்டுவதிலிருந்து நமது சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பார்த்தால் இன்னும் எத்தனையோ விதங்களில் அடகு வைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது.
இப்படி நல்வாய்ப்புகளை வழங்குவதாக மாறியிருக்கிறது அடகு. இந்நிலையில் எவற்றையெல்லாம் அடகு வைக்கலாம், அடகு வைக்கும்போது எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றைப் பற்றி வரிசையாகக் கொடுத்திருக்கிறோம், படித்துப் பயனடையுங்கள்!

தங்கத்தை தாராளமாக 'அடகின் ராணி’ என்றே சொல்லலாம். காரணம் மற்ற எந்த கடன் வாங்குவதை விடவும் டக்கென்று நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிடலாம் என்பதால்தான். நகை இருந்தால் கிட்டத்தட்ட கையில் ரொக்கம் இருப்பதற்குச் சமம்! அதனால்தான் தங்கம் இன்றைக்கும் பளபளக்கிறது!

சாதகங்கள்!

பத்திரங்களையும் ஆவணங்களையும்போல அல்லாமல் சில நிமிடங்களி லேயே தங்க நகையின் தரத்தை யும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி விடலாம்!
கூட்டுறவு உள்ளிட்ட சில வங்கிகளில் அடகு வைக்க வங்கிக் கணக்குக்கூட தேவைப் படாது. கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு நகல் மட்டும் கொடுத்தால் போதும்; உடனடி யாக உறுப்பினராகி, நகைக் கடனைப் பெற்று விடலாம்.
ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தாராளமாக நகைக் கடன் பெற முடியும். இருப்பினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 1,400 ரூபாய் வரை கடன் தருகிறார்கள்.
வங்கிகளில் மட்டுமின்றி அடகுக் கடைகள், தனிநபர்கள் என எல்லா இடத்திலும் தங்கம் செல்லுபடியாகும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!
வங்கிகளில் கடன் தொகையில் சுமார் 0.56% செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும்.
வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.
பொதுவாக மூன்று வருடங்கள் வரை வட்டி, அசல் எதுவும் கட்டவில்லை என்றால் வங்கிகள் நோட்டீஸ் அனுப்பும். வங்கிக்கு வங்கி கடனுக்கான காலம் வேறுபடலாம். குறிப்பிடப்பட்ட தேதியில் கடனைக் கட்டவில்லை என்றால் நகை ஏலத்துக்குப் போய்விடும்.
தனியார் நிதி நிறுவனங் களில் வட்டி மிக அதிகம். சில தனியார் நிறுவனங்களில் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டியும், அதன் பிறகு மிக அதிக வட்டியும் வசூலிக் கிறார்கள். இதில் கொடுமை, மூன்று மாதங்கள் தாண்டிய பிறகுதான் அதிக வட்டி விதிக் கிறார்கள் என்றாலும், கடன் வாங்கிய முதல் நாளிலிருந்தே அந்த அதிக வட்டியை கணக்குப் பண்ணி கறந்து விடுகிறார்கள்!
தனியார் நிதி நிறுவனங் களில் நகை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், விதிமுறைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவும்.
தனிநபர்கள், பான் புரோக்கர்கள் ஆகியோரிடம் அடகு வைப்பதை கடைசிக் கட்டமாக வைத்துக் கொள்ளவும்.

வரிச் சலுகை!    
நகை அடமானக் கடனுக்கு மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. ஆனால், பிஸினஸ் செய்யும் நபர்களுக்கு வட்டியை லாபத்தில் கழித்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகையை தொழில் செலவில் கணக்கு காண்பித்து, சலுகை பெறலாம். நகைக் கடன் அத்தாட்சி கடிதம் மற்றும் வட்டி ரசீது போன்றவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.                                  
-பானுமதி அருணாசலம்


கையில் காசில்லை; தவிர்க்க முடியாத தேவைக்கு பணம் தேவை. இந்த மாதிரி சமயங்களில் சொத்து இருந்தால் கவலையில்லை. வீடோ, மனையோ, ஃப்ளாட்டோ அதன் மதிப்புக்கேற்றவாறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய கடனை வட்டியோடு அசலையும் ஒவ்வொரு மாதமும் கட்டினால் சொத்தும் கையை விட்டுப் போகாது; நம் பிரச்னையும் தீரும்.
வீட்டை அடமானம் வைப்பது என்று முடிவு செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட ஆட்களிடம் அடமானம் வைப்பதைவிட வங்கிகளில் அடமானம் வைப்பது பாதுகாப்பானது. தனியார் வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் நிறைய அலைய வேண்டியிருந் தாலும் வட்டி குறைவு.  
சாதகங்கள்!
ஜாமீனாக நம் சொத்தைக் கொடுப்பதால் கடன் எளிதாகக் கிடைக்கும்.
மாதத் தவணை முறை என்பதால் கடன் கட்டுவதில் அதிக சிரமம் இருக்காது.
அடமானம் வைத்திருந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கலாம். வாடகைக்கு விடுவதிலும் பிரச்னை இருக்காது.
அடிப்படைத் தகவல்கள்!
வீடு/மனை உள்ளாட்சி அமைப்பின் முறையான அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
வங்கியின், சொத்துகள் தொடர்பான மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து சொத்தின் மதிப்பை தீர்மானம் செய்வார். அதனடிப்படையில் வங்கி கடன் வழங்கும்.
கடன் தொகை!
சொத்தின் மதிப்பில் ஐம்பது சதவிகிதம் வரை அடமானக் கடன் பெறலாம். குறைந்தது ஒரு லட்சத் திலிருந்து அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என அடமானத் தொகை வேறுபடும்.
சொத்தின் மதிப்பில் பாதி கடன் தொகையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தே கடன் தொகை தீர்மானமாகும். மாதச் சம்பளம் பெறுகிறவர் எனில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் 60% என பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் திறன், இதில் குறைந்தபட்ச தொகை எதுவோ அந்த அளவுக்கே கடன் கிடைக்கும்.
கடனை அதிகபட்சம் 84 மாதங்கள் வரை திரும்பக் கட்டலாம்.

தகுதி!
கடனுக்கு விண்ணப் பிப்பவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது நிரந்தர பணியில் இருக்க வேண்டும்.
சொந்தத் தொழில் எனில் மூன்று வருடங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆறு மாதங்களாவது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 லிருந்து 60 வரை. சில வங்கிகளில் 21 லிருந்து 60 வரை..
தேவையான ஆவணங்கள்!
பட்டா, சொத்து மதிப்பு சான்றிதழ், 30 வருட வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம், சொத்துவரி ரசீது, முகவரிச் சான்று, அடையாளச் சான்று.
வட்டி விகிதம்!
மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். வட்டி 12-16% வரை.
- நீரை.மகேந்திரன்


காலத்துக்கேற்ப மதிப்பு உயர்ந்து, பிற்காலத்திற்குப் பயன்படும் என்பதால்தான் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்கிறோம். திடீரென நமக்கு பணம் தேவைப்பட்டால் இவற்றில் ஏதாவது ஒன்றை விற்று, செலவை சமாளிப்பது ஒரு வழி. இதைவிட மிகச் சிறந்த வழி, இந்த நிதி ஆவணங்களையே அடமானம் வைத்து, கடன் பெறுவது!
பங்குகள்!
பங்குகளைப் புரோக்கிங் நிறுவனங்களிடமோ அல்லது வங்கிகளிலோ அடமானம் வைக்கலாம். வங்கிகளில் வட்டி சற்று குறைவாக இருக்கும். எந்த பங்குகளுக்கு கடன் தரமுடியும் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்தான் முடிவு செய்யும். பங்குகளின் மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் கிடைக்க வாய்ப்புண்டு. அடமானத்தில் இருக்கும் பங்குகளின் மதிப்பு 10% சதவி கிதத்துக்கும் கீழ் குறையும் போது, அதற்கு இணையான தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்!
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைக் கொடுத்து கடன் வாங்க முடியும். மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
ஏறக்குறைய இதே நடைமுறைதான் தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் இதர பத்திரங்களுக்கும்.

ஃபிக்ஸட் டெபாசிட்!
ஃபிக்ஸட் டெபாசிட்டுக் கான ஆவணத்தைக் கொடுத்து வங்கிகளில் எளிதில் கடன் வாங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் தொகையில் அதிக பட்சம் 90% வரை கடன் கிடைக்கும். வட்டியைப் பொறுத்தவரை ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும்  வட்டியைவிட கூடுதலாக ஒரு சதவிகிதம்தான் இருக்கும். கடனைத் திரும்பச் செலுத்தத் தவறினால், முதலீடு செய்திருக்கும் காலம் முடி வடைந்தவுடன் வட்டி போக மீதித்தொகையை  திருப்பித் தருவார்கள்..
இன்ஷூரன்ஸ்!
இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்த அதே நிறுவனத்திடமே அடமானம் வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். குறிப் பிட்ட டிரெடிஷனல் மற்றும் யூலிப் பாலிசிகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். டேர்ம் பாலிசி போன்றவற்றுக்கு கிடைக்காது. யூலிப் பாலிசியைப் பொறுத்தவரை அதன் என்.ஏ.வி. மதிப்பில் அதிகபட்சம் 40% வரை கடன் வாங்கலாம். டிரெடிஷனல் பாலிசியில் சரண்டர் மதிப்பில் 90% வரை கடன் பெறலாம்.
சாதகங்கள்!
ஃபிக்ஸட்டைப் பொறுத்த வரை அதிவிரைவில் கடன் கிடைத்துவிடும்.
நகை, வீடு போன்ற சென்டிமென்ட் சமாசாரம் இவற்றில் இருக்காது.
இன்ஷூரன்ஸில் கிடைக்கும் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி மிகவும் குறைவு.
- வா.கார்த்திகேயன்.


Source - Vikatan Magazine